Categories: Entertainment News latest news

கட்டுன புருஷன் அங்க கம்பி எண்ணுறான்.. உனக்கு போட்டோஷூட் கேக்குதோ!.. மகாலட்சுமியை விளாசும் ஃபேன்ஸ்!..

சுமார் 16 கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டு விட்டார் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் என போலீசாருக்கு புகார் வந்த நிலையில் அதனை விசாரித்த காவல்துறையினர் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் இதுவரை பதிவிடாமல் இருந்து வந்த மகாலட்சுமி.

Also Read

திடீரென தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பட்டுப் புடவை மற்றும் விதவிதமான நகைகளை அணிந்து கொண்டு முன்னழகையும் பின்னழகையும் காட்டியபடி ஏகப்பட்ட போட்டோ ஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜய்யோட ஹீரோயினை மட்டுமில்லை!… வில்லனையும் ஆட்டைய போட்ட அஜித்!.. லேட்டஸ்ட் போட்டோவ பாருங்க!..

கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும் முன்னாள் சன் டிவி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த ஜாடிக்கு இப்படி ஒரு மூடியா என நெட்டிசன்கள் பலவிதமான ட்ரோல்களை வெளியிட்டனர்.

ஆனால் அதற்கு எல்லாம் கொஞ்சமும் சளைக்காமல் தொடர்ந்து ரவீந்திரனும் மகாலட்சுமியும் தங்களது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பகிர்ந்து கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: ஜெயிலர் படம் எனக்குதான் தலைவலி!.. பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரே ரஜினி..

கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி, தங்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதை இருவரும் கோலாகலமாக கொண்டாடி வந்தனர். மேலும், தங்களைப் பற்றி மோசமான வீடியோக்களை போட்டு வந்த யூடியூப் சேனல்களையும் கழுவி ஊற்றினர்.

ஆனால், திடீரென பதினாறு கோடி ரூபாயை தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மோசடி செய்து ஏமாற்றி விட்டார் என்கிற குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், மகாலட்சுமி எந்த ஒரு கவலையும் இன்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு விளம்பரம் வருகிறாரே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி மகாலட்சுமியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Published by
Saranya M