BB Tamil9: நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? ரூட் விட்ட திவாகருக்கு தரமான பதிலடி கொடுத்த திவ்யா

Published on: January 14, 2026
divya
---Advertisement---

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஃபைனலிஸ்ட்டாக திவ்யா, அரோரா, சபரி, விக்ரம் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். இவர்களில் யாருக்கு அந்த டைட்டில் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பாக இருப்பது திவ்யாதான். எல்லா சூழ் நிலைகளிலும் திவ்யாவின் குரல் ஓங்கியிருந்திருக்கிறது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். நாளை பொங்கல் விழா என்பதால் இந்த வாரம் முழுவதும் ஒரே செலிபிரேஷன் வாரமாகத்தான் இருக்கப் போகிறது. பிக்பாஸ் வீடே முழுக்க களை கட்டப் போகிறது. பிக்பாஸ் என்றாலே அங்கு எமோஷன், காதல், சண்டை என எல்லாம் கலந்த கலவைதான் அந்த வீடு.

வெளியில் இருந்து பார்க்கும் ரசிகர்களுக்கு அதுதான் விருப்பமாகவும் இருக்கிறது. அதிலும் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறும் காதலுக்கு தனி மவுசுதான். கடந்த எட்டு சீசன்களாக பல காதல் ஜோடிகளை இந்த பிக்பாஸ் பார்த்து வருகிறது. அதில் அமீர் பாவ்னி ஜோடிதான் திருமண வாழ்க்கையில் நுழைந்திருக்கின்றனர். இவர்களின் காதல் அனைவராலும் ரசிக்கப்பட்ட காதலாக இருந்தது.

இந்த சீசனில் பார்வதியும் கம்ருதீனும் காதல் கண்டெண்ட் கொடுத்தாலும் அது பல பேருக்கு முகம் சுழிக்க வைத்த காதலாகவே பார்க்கப்பட்டது. இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை பயன்படுத்துவது, அ நாகரீகமாக நடந்து கொண்டது என அவர்களை பார்த்தாலே எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இந்த வகையில் இப்போது அரோரா , துஷார் காதலை அரங்கேற்றி வருகின்றனர்.

ஹேய் நாமும் காதல் கண்டெண்ட்டை கொடுப்போம் என இறங்கியிருக்கிறார் வாட்டர்லெமன் திவாகர். அதுவும் யாருமே கிட்ட நெருங்க முடியாத திவ்யாவிடம் ஜொள்ளு வடித்து வருகிறார். திவ்யாவிடம் ‘திவ்யா பேசாமல் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா. நம்ம காம்பினேஷன் செமையா இருக்கும் தெரியுமா’ என கேட்டிருக்கிறார். அதற்கு திவ்யா ‘முண்டம் , எனக்கு ஏற்கனவே வெளியே ஆள் இருக்கு. எத்தனை தடவ சொல்றது’னு திட்டுகிறார்.

அதை நம்பாத திவாகர் மறுபடியும் கேட்க, துஷார் ஓடி வந்து ‘உண்மையிலேயே திவ்யாவுக்கு ஆளு இருக்கு. நான் வெளியில் இருக்கும் போது பார்த்தேன்’ என கூறிய பிறகுதான் திவாகர் அமைதியானார்.