முழுநேர அரசியல்வதி ஆவாரா விஜய்!.. அவரோட பிளான் இதுதான்!.. பிரபலம் என்ன சொல்றார் பாருங்க!...

by Rohini |   ( Updated:2024-02-22 06:43:43  )
vijay
X

Actor Vijay: விஜயின் அரசியல் சூடுபிடிக்க ஒரு பக்கம் ரசிகர்கள் விஜயின் படங்களை பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறோம் என்று வருத்தத்தில் இருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையரங்க உரிமையாளர்களும் விஜயை நாங்கள் ரொம்பவும் மிஸ் பண்ணுவோம் என்றும் தமிழ் சினிமாவுக்கு இது பெரிய லாஸ் என்றும் கூறிவந்தார்கள்.

இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான தனஞ்செயன் விஜய் குறித்து பல தகவல்களை கூறினார். அதாவது விஜய்க்கு அவருடைய 69வது படம்தான் கடைசி படமா என தனஞ்செயனிடம் கேட்டதற்கு ‘கடைசி படம்லாம் இல்லை. ஒரு சின்ன பிரேக் எடுக்க போகிறார் விஜய். அவ்ளோதான்’ என கூறினார்.

இதையும் படிங்க: இறப்புக்கு முன் கடைசியாக என்னிடம் எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!.. பிரபல நடிகை உருக்கம்…

அந்த பிரேக்கிற்கு முன் விஜயின் 69வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினால் படம் மாஸாக இருக்கும் என்றும் பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் ஹீரோவை அவர் காட்டிய விதம் பிரமிக்க வைத்திருந்தது. அதனால் விஜய் சினிமாவிற்கு பிரேக் எடுப்பதற்கு முன் அவருடைய அந்த கடைசி படம் கார்த்திக் சுப்புராஜ் படமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என கூறினார்.

மேலும் விஜய் நாம் பெரிசாலாம் மிஸ் பண்ண மாட்டோம். 2025ல் விஜயின் 69 வது படம் கண்டிப்பாக வரும். அதன் பின் 2026ல் தேர்தல் வேலைகளை கவனிப்பார் விஜய். அரசியலில் அவர் நினைத்த இடத்தை அடைந்து விட்டால் மக்களின் பூர்த்திகளை தீர்த்து வைப்பார். அப்படி இல்லையெனில் மீண்டும் சினிமாவிற்கு வந்துவிடுவார் என தனஞ்செயன் கூறினார்.

இதையும் படிங்க: ரஜினியை பதறவிட்ட கேப்டன் விஜயகாந்த்!.. பாத்ததும் பயந்துட்டாரு!.. நடிகர் சொன்ன தகவல்…

அப்படிப்பார்க்கும் போது ஒரு வருடம் மட்டும்தான் விஜயை மிஸ் பண்ணுவோம் என கூறினார். ஆனால் விஜயும் வெற்றிமாறனும் சேருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற தகவலையும் கூறினார். வெற்றிமாறன் விடுதலை 2வில் கவனம் செலுத்தி வருகிறார். அதனை அடுத்து சூர்யா ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் போது விஜயை வைத்து படம் எடுக்க வெற்றிமாறனால் முடியாத காரியம் என்றும் தனஞ்செயன் கூறினார்.

Next Story