திமிர அடக்கனும்.. அஜித்தை புறக்கணிங்க! கோடம்பாக்கமே எதிரா திரும்பிட்டாங்களே
Actor Ajith: சமீபகாலமாக அஜித்தை பற்றி பல காரசாரமான விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதை பற்றி கொஞ்சம் கூட கவலையில்லாமல் அஜித் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறார். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் அஜித் குறித்து அவருடைய ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார்.
அஜித்தின் சமீபகால நடவடிக்கைகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தமிழ் சினிமாவிலேயே இருந்து கொண்டு தமிழ் சினிமாவிலேயே பணம் சம்பாதித்து ஆனால் தமிழ் சினிமாவை துளி கூட மதிக்க மாட்டேன் என இருக்கும் ஒரே நடிகர் அஜித். அதனால் அஜித்தை புறக்கணிப்போல் என அந்தனன் கூறினார். தமிழ் சினிமாவை மதிக்க மாட்டேன், தமிழ் சினிமாவை எட்டி உதைப்பேன். ரசிகர்களை மதிக்க மாட்டேன் என ஒரு நடிகர் இருக்கிறார். அவரை உச்சத்தில் வைத்து கொண்டாடும் ரசிகர்களை திருத்துவதுதான் என் கடமை என அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க: ஃபிலிமே இல்லாம ஷூட்டிங்! வடிவேல் காமெடி மாதிரில்ல இருக்கு!. கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த பாரதிராஜா!
அஜித்தின் ஒரு பழைய பேட்டியில் ‘ஒருவர் அவரவர் கடமையை சரியாக செய்தால் போதுமானது’ என அஜித் கூறியிருக்கிறாராம். இதை குறிப்பிட்டு பேசிய அந்தனன் ‘ நீங்க முதலில் உங்க கடமையை செய்தீர்களா? எந்தப் படத்திலேயாவது டை அடித்துக் கொண்டு நடிக்கிறீர்களா? இயக்குனர் தான் கதை எழுதும் போது தன் நடிகன் இப்படி இருக்க வேண்டும், இந்த மாதிரியான உடை அணிய வேண்டும் என்றெல்ல்லாம் நினைத்துதான் எழுதுவான். அவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்கிறீர்களா? நீங்க கடமையை பத்தி பேசுறீங்க?’ என கேட்டிருக்கிறார்.
மேலும் நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். அவரின் இறப்பிற்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்துவது கடமை. இந்த கடமையை செய்தாரா? அவருடைய ஒரு பேட்டியிலாவது என்னை வளர்த்துவிட்டவர்கள் இவர்கள்தான் என வாய்தவறியாவது சொல்லியிருப்பாரா? எஸ்.ஜே.சூர்யா இல்லைனா ஒரு வாலி இல்லை. முருகதாஸ் இல்லைனா ஒரு தீனா இல்லை. இதெல்லாம் அஜித்துக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்கள். ஆனால் அதை பற்றி எங்கேயாவது சொல்லியிருப்பாரா?
இதையும் படிங்க: பாக்கியாவை வச்சி வாங்கும் ஈஸ்வரி…உங்களுக்கு தேவை தான்.. வம்பை இழுத்துவிட்டுக்கிறதே வேலையா போச்சு…
பெரிய பெரிய நட்சத்திரங்களான ரஜினி, கமலே பாலசந்தரை இன்றளவும் மனம் உருகி பேசி வருகிறார்கள். ஆனால் அஜித்? அதுமட்டுமில்லாமல் அஜித்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக பணியாற்றியவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. அவர் மறைவுக்கு வந்தாரா? எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் ஒரு காலத்தில் நண்பராய் இருந்தார் என்பதற்காகவாவது வந்திருக்கலாமே? இப்படி இருக்கும் நபரை நாம் எப்படி மதிப்பது? என்றும் அந்தனன் கூறியிருக்கிறார்.
கடமையை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத ஆளு அஜித். எந்தப் பட ப்ரோமோஷனுக்கும் வருவது இல்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்துக் கொண்டு சுற்றும் ஒரே நடிகர் அஜித். இப்படிப் பட்டவரை கண்டிப்பாக நாம் புறக்கணிக்க வேண்டும் என அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க: டிடியால் கதறி அழும் சகோதரி! கடைசில என் மடியிலேயே கைவச்சிட்டீங்களே – ஐயோ இப்படி ஆகிப் போச்சே