விஜய் செஞ்ச வேலையில் அஜர்பைசானில் இருந்து கிளம்பிய அஜித்?!.. இது என்னடா அக்கப்போரு!..

Published on: November 25, 2023
ajith
---Advertisement---

Vijay ajith: சினிமா உலகில் போட்டி, பொறாமை என்பது எப்போதும் இருக்கும். அதுவும், இரு நடிகர்களுக்கு இடையேயான போட்டி என்பது பல வருடங்களாக தொடர்ந்து வரும் விஷயம்தான். எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்தில் இது துவங்கியது. ஆனால், இருவரும் தங்கள் பாணியில் படங்களில் நடித்தாலும் அவர்களுக்குள் பொறாமை இருந்தது இல்லை.

ரஜினி – கமல் பீக்கில் இருந்தபோதும் இது இருந்தது. ரஜினியும், கமலும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் வெளியே அவரின் ரசிகர்கள் மோதிக்கொள்வார்கள். அது இப்போது வரை தொடர்கிறது. ஆனால், அவர்களுக்குள் தொழில் போட்டி இருக்கிறதே தவிர பொறாமையோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை.

இதையும் படிங்க: அமீர் சொல்றது தான் உண்மை!.. ஞானவேல் ராஜா சொல்றது பொய்.. சாட்சிக்கு வந்த சசிகுமார்!..

கமல் தொடர்பான விழாக்களில் ரஜினி கலந்து கொண்டு பேசுவார். கமலே சிறந்த நடிகர் என பல மேடைகளிலும், பேட்டியிலும் ரஜினி பேசியிருக்கிறார். சமீபத்தில் கூட தலைவர் 170 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்தபோது ரஜினியும், கமலும் பரஸ்பரம் சந்தித்து நட்பு பாராட்டிக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

ஆனால், இதே மனநிலை விஜய் – அஜித் இடையே இருக்குறதா என்பது சந்தேகம்தான். அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. 3 மாதங்கள் ஒரேகட்ட பிடிப்பாக முடித்துவிடலாம் என திட்டமிட்டுதான் போனார்கள். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென 2 நாளைக்கு முன்பு விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்பிவிட்டது.

விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் சில நாட்கள் நடந்து முடிந்து பின்னர் சென்னையில் நடந்தது. அடுத்து இந்த படக்குழுவும் அசர்பைஜான் செல்ல முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: நடிக்கத் தெரியலைன்னு தான் மனிஷாவை மாற்றினேன்!.. பாலியல் தொல்லை கொடுக்கல.. சீனு ராமசாமி பதில்!..

இதைத்தொடர்ந்துதான் அஜித் அங்கிருந்து கிளம்பிவிட்டார் என சொல்லப்படுகிறது. தளபதி 68 படமும், தலைவர் 171 படமும் சென்னையில் ஒரே இடத்தில் நடந்தபோது ரஜினியை சந்திப்பதை தவிர்ப்பதற்காக படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்ற சொன்னார். இப்போதும் விஜய் அங்கே வருகிறார் என்றதும் அஜித் கிளம்பிவிட்டார்.

பல வருடங்களாக விஜய் – அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையாக மோதிக்கொள்கிறார்கள். அசிங்க அசிங்கமாக ஹேஷ்டேக் போட்டு மோதிக்கொள்கிறார்கள். அஜித் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இப்போது ஒரே இடத்தில் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினி – கமல் போல இருவரும் சந்தித்து ஒரு புகைப்படம் வெளியே வந்திருந்தால் அது அவர்களின் ரசிகர்களின் மனநிலையை கொஞ்சம் மாற்றியிருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பே வராமல் இருவரும் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

இதையும் படிங்க: மனிஷா யாதவ் மட்டுமல்ல!.. பிந்து மாதவிக்கும் ரூட் போட்ட சீனு ராமசாமி?.. அடுத்த பூகம்பம் ஸ்டார்ட்?..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.