வாரிசு Vs துணிவு.. ஜெயித்தது யார்?.. எந்த படம் அதிக வசூல்.. தகவல் உள்ளே!...
விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த வாரிசு படமும், அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக எதிர்பார்த்த துணிவு படமும் கடந்த 11ம் தேதி வெளியானது. பல வருடங்களுக்கு பின் விஜய் - அஜித் இருவரின் திரைப்படங்களும் ஒரேநேரத்தில் வெளியானதால் எந்த படம் அதிக வசூலை பெறும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் எழுந்தது.
சென்னை ரோகினி தியேட்டரின் அருகே ஒரு அஜித் ரசிகரின் உயிர் போனது, துணிவு போஸ்டரை விஜய் ரசிகர்கள் கிழித்தது, வாரிசு போஸ்டரை அஜித் ரசிகர்கள் கிழித்தது, தியேட்டரின் கண்ணாடி கதவை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் உள்ளே சென்றது என சென்னை ரோகிணி தியேட்டர் களோபரம் ஆனது.
விஜயின் வாரிசு படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாகவும், அஜித்தின் துணிவு படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாகவும் வெளியாகி இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது. வாரிசு படம் ஹிந்தி சீரியல் போல இருப்பதாகவும், சூர்யவம்சம் உள்ளிட்ட பல படங்களை இப்படம் நினைவுபடுத்துவதாகவும், சில காட்சிகளில் விஜய் ஓவர் ஆக்டிங் செய்திருப்பதாகவும் ஒரு பக்கம் விமர்சனம் எழ, துணிவு முதல் பாதி ஓகே, இரண்டாம் பாதி மற்றும் கிளைமேக்ஸ் போரடிப்பதாகவும், படத்தில் வரும் ஃபிளாஸ்பேக் காட்சியில் சுவாரஸ்யமே இல்லை எனவும் பலரும் கூறினர்.
இந்நிலையில், தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக வசூலை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் வசூலாக வாரிசு ரூ.20.38 கோடியும், துணிவு திரைப்படம் ரூ.21.97 கோடியும் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, வாரிசு படத்தை விட துணிவு ரூ.1.59 கோடி அதிக வசூலை பெற்றுள்ளது.
அதேநேரத்தில் இந்திய அளவில் பார்க்கும்போது வாரிசு படம் முதல் நாள் வசூலாக ரூ.30 கோடியையும், துணிவு திரைப்படம் ரூ.28 கோடியும் வசூல் செய்துள்ளது. விஜயின் திரைப்படங்கள் கேரளாவில் நல்ல வசூலை பெறும். அதன்படி வாரிசு படமும் அங்கு நல்ல வசூலை பெற்றுவருவகிறது. அதேநேரம் உலகம் முழுவதும் துணிவு படம் ரூ.50.95 கோடியும், வாரிசு படம் ரூ.45.30 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒருநாள் வசூல் நிலவரம்தான் என்றாலும் நாட்கள் செல்ல செல்லவே எந்த படம் அதிகமான வசூலை பெற்றது என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு மனுஷனுக்கு இப்படி ஒரு நிலைமை வரவே கூடாதுப்பா….! கெத்தான நடிகனுக்கு வந்த பரிதாபத்தைப் பாருங்க…!!!