பிக்பாஸ் ஷாலின் ஜோயா காதலன் இந்த பிரபலமா? பிரச்னைக்கு பஞ்சம் இருக்காது போல!
Shaalin Zoya: சீரியல் நடிகையான ஷாலின் ஜோயா ரொம்பவே பிரபலமானவர் என்றாலும் தற்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாகி இருக்கிறார். ஆனால் அவரின் காதலன் தமிழ் ஃபேன்களுக்கு தெரிந்த முகம் என்றால் நம்ப முடிகிறதா?
மலையாளத்தில் ஏற்கனவே நிறைய சீரியல்களில் நடித்து ஹிட்டடித்தவர். சில படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் ராஜா மந்திரி படத்தில் நடித்திருந்தாலும் கண்ணகி படத்தில் நால்வரில் ஒரு நாயகியாக வந்து நல்ல வரவேற்பை பெற்றார். நடிப்பில் ஹிட்டடித்தவர். தற்போது தமிழிலில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா… பாக்கியலட்சுமியால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்…
இரண்டு வாரங்களை கடந்த நிலையில் ஜோயாவின் பேச்சுக்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து இருக்கின்றனர். ஆனால் இவர் சிங்கிள் இல்லையாம். பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசனின் காதலி தான் ஷாலின் ஜோயா எனக் கூறப்படுகிறது. இருவரும் ரொமாண்டிக்காக சுற்றும் வீடியோக்களை தன்னுடைய யூட்யூப் பக்கத்தில் வாசன் ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறார்.
பிரச்னைக்கு பஞ்சமில்லாத வாசன் தற்போது லைசன்ஸ் ரத்தால் சாதாரண விலாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட ஜோயா குக் வித் கோமாளி செல்ல இருப்பதாக செய்தி வந்தவுடன் குரோஷி மற்றும் இர்பானிடம் அவளை நன்றாக பார்த்து கொள்ள சொல்லி இருந்தேன். ஆனால் புகழ் அவளை கட்டி பிடித்து பேசுவது பிடிக்கவில்லை எனவும் பேசி இருந்த வீடியோ வைரலானது.