வேட்டையனுடன் கங்குவா மோதாததுக்கு இதுதான் காரணமா? பின்னணியில் இத்தனை விஷயங்கள் இருக்கா?

vettaiyan ganguva
சமீபத்தில் மெய்யழகன் படவிழாவில் சூர்யா பேசும்போது கங்குவா படத்தை நீங்க பார்த்துக்குவீங்க. அது ஒரு குழந்தை. அதனால் நீங்க பார்த்துக்குவீங்கன்னு நம்பிக்கை இருக்கு. தமிழ்சினிமாவுல 50 ஆண்டுகளா இருக்குற நடிகர் ரஜினிகாந்த். அவரைப் பார்த்து நாம் வளர்ந்துருக்கோம்.
அவருக்கு வழிவிடுறதுல நாம் பெருமையடைய வேண்டும். நாம் பார்த்து வளர்ந்த நபருக்காக நாம வழிவிடுறோம். அதனால கங்குவா படத்தோட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது என்றார்.
கங்குவா படம் வேட்டையன் படத்துக்கூட மோதவில்லை என சூர்யாவே மெய்யழகன் படவிழாவில் தெரிவித்துள்ளார். இது வரவேற்கக்கூடிய விஷயம் என்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. வேறு என்னென்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
கங்குவா ஒரு பெரிய படம். பான் இண்டியா படம். எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு பெரிய கேப். ஏற்கனவே ஜெய்பீம், சூரரைப் போற்று படம் வந்து ஓடிடியில வந்தது.

surya
என் ரசிகர்களுக்கு பிக் ஸ்கிரீன்ல பெரிய படத்தைக் கொடுக்கணும்னு ஆசை. 33 மொழிகள்ல இந்தப் படத்தை டப் பண்ணப் போறோம். சௌத் ஏசியாவைத் தவிர உலகம் முழுக்க இந்தப் படத்தோட புரொமோஷனுக்கு நாங்க போகப்போறோம். அதனால வேட்டையன் கூட போட்டிப் போட முடியாதுன்னு சூர்யா சொல்லிடறாரு. தம்பி சூர்யாவுக்கு நன்றின்னு ரஜினி சொல்றாரு. எவ்வளவு பெரிய பெருந்தன்மை?
72வயசுலயும் கிங்கா வந்து ஒருத்தர் நிக்காருன்னா எவ்வளவு பெரிய விஷயம். எப்டிஎப்எஸ் ஷோ தான் ஒரு படத்தோட வெற்றியைத் தீர்மானிக்கும். மச்சான் காலிடா, மச்சான் சூப்பர் டூப்பர் ஹிட் டா, மச்சான் சுமார்டா இவ்வளவு தான்.
Also read: இது போதுமா?.. இன்னும் கொஞ்சம் வேணுமா?!.. நீச்சல் குளத்தில் மஜா பண்ணும் ஆண்ட்ரியா…
அக்டோபர் 10 சூர்யாவுக்காக லாக் பண்ணின நாளா என்ன? பெரிய ஹீரோக்களோட படங்கள் லீவு நாள்ல தான் பயன்படுத்த முடியும். அந்த இடத்துல லாக் பண்றாங்க. வேட்டையன் ரஜினிக்கு மட்டுமல்ல.
லைகாவுக்கும் முக்கியமான படம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். எது எப்படியோ ஒரு பெரிய நடிகருக்கு முன்னுதாரணமாக ஒரு சின்ன நடிகர் வழி விடுறாருன்னா அது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தானே.