Cinema History
கமல் ஏன் டென்ஷன் ஆனாரு?. ரஜினி எப்படி ஜாலி மேனா இருந்தாரு!.. ஜனகராஜ் கலகல பேட்டி
‘தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சிப்பா’, ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…’ன்னு சொன்னா நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் 80களில் கொடிகட்டிப் பறந்த காமெடி நடிகர் ஜனகராஜ் தான். இவரது கலையுலக வாழ்க்கையில் நடந்த சில ஆச்சரியமான தருணங்களை அவர் இவ்வாறு நினைவுகூர்கிறார்.
கல்லூரி நாள்களில் ‘எனக்கு லவ்வு வரல… எனக்கு வந்ததே கலாட்டா… எல்லாரையும் சிரிக்க வைக்கணும்’ என்றும் வெள்ளந்தியாக சொல்கிறார் ஜனகராஜ். அதே போல பரீட்சை எழுதும்போது பிட் அடிக்கத் தெரியாதாம். ஏன்னா அதுல சின்ன எழுத்தா இருக்குமாம். அதனால் யானையைப் பற்றி எழுதச் சொன்னா ‘யானையா அது எவ்ளோ பெரிசா பயங்கரமா இருக்கும்’னு சொந்த நடையில பக்கம் பக்கமா எழுதி வச்சிட்டு வந்துடுவாராம்.
இதையும் படிங்க… போட்ட மொத்த ஆல்பமும் ஹிட்! ஆனா ஆளோ அவுட்.. தன்னடக்கத்தால் காணாமல் போன இசையமைப்பாளர்
கிழக்கே போகும் ரயில் தான் என்னோட முதல் படம். முதல் ஷாட் எனக்கும் கவுண்டமணிக்கும் தான். முதல் நாள் எங்க அப்பா, அம்மா கால்ல விழுந்தேன். அதுக்கு அப்புறம் 3 பேரு கால்ல விழுந்தேன். அந்த ஷாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி டைரக்டர் பாரதிராஜா, கேமராமேன் நிவாஸ், தயாரிப்பாளர் ராஜ்கிரண் இவங்க கால்ல விழுந்துட்டுத் தான் ஷாட்டுக்குப் போனேன். மற்றவங்க கால்ல விழுந்தது எல்லாம் எனக்கு பிடிக்காதது.
இதையும் படிங்க… விலங்குகளுக்கும் கேரக்டர் ரோல்.. எம்ஜிஆருடன் நட்பு.. வேற லெவலில் வெளியான தேவர் பிலிம்ஸ் படங்கள்..
ரஜினி சார் கூட நடிக்கும்போது ஜாலியா இருக்கும். கமல் கூட சில நேரத்துல டென்ஷன் ஆயிடுவாரு. ஏன்னா வேலை அவருக்கு ஒழுங்கா நடக்கணும். ரஜினி சார் அப்படி இல்ல. எவன்னா எப்படியும் போங்க. அவரு சிரிச்சிக்கிட்டே இருப்பாரு. நானும் ரஜினியும் தெலுங்கில தான் பேசுவோம். அவருடன் இணைந்து செய்த காமெடி தான் என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சிப்பா… அது இன்று வரை மறக்க முடியாது என்ற ஜனகராஜ் அந்த முழுவசனத்தையும் வரி பிசகாமல் அப்படியே சொல்லி அசத்துகிறார். அதே போல என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா என்ற காமெடியை எழுதியவர் டைரக்டர் மணிரத்னம் தானாம்.
பாட்ஷா, அருணாச்சலம், படிக்காதவன், ராஜாதி ராஜா, பாண்டியன், அண்ணாமலை, பணக்காரன், தம்பிக்கு எந்த ஊரு உள்பட பல படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். கமலுடன் நாயகன், விக்ரம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.