அஜீத் ஏன் விஜய்க்குப் போட்டியா அதை செய்யவில்லை? பிரபலம் சொன்ன ஆச்சரிய பதில்!

by sankaran v |   ( Updated:2024-09-16 09:12:13  )
vijay ajith
X

vijay ajith

தல அஜீத்தை தமிழ்த்திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் என்பார்கள். தன்னோட ரசிகர் மஅஜீத்குமார் ஏன் விஜயக்குப் போட்டியாக அதைச் செய்யவில்லை? பிரபலம் சொன்ன ஆச்சரிய பதில்!

தல அஜீத்தை தமிழ்த்திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் என்பார்கள். தன்னோட ரசிகர் மன்றத்தையே கலைத்த போதும் கொஞ்சம் கூட ரசிகர்கள் அவருக்குக் குறையவில்லை. மாறாக அதிகரிக்கவே செய்துள்ளனர். விஜய் இன்று ரஜினிக்கு இணையாக சம்பளம் பெறக்கூடியவர்.

கடைசியாக அவர் நடித்த கோட் படத்துக்கு 200 கோடி பெற்றுள்ளார். விஜயைத் தளபதின்னு சொல்றாங்க. தன்னோட 69வது படத்தோட எண்ட் கார்டு போட்டுள்ளார் விஜய். அரசியலில் முழுமூச்சாக இறங்க உள்ளதால் தான் இப்படி ஒரு முடிவு.

Ajithkumar

அஜீத், விஜய் சம கால நடிகர்கள். இருவருடைய படங்களுக்கும் ஆரோக்கியமான போட்டி உண்டு. தந்தையின் பின்னணி மற்றும் தனது சொந்தத் திறமை, கடின உழைப்பு ஆகியவற்றால் தளபதி அந்தஸ்துக்கு முன்னேறியவர் விஜய்.

தனி ஆளாக நின்று தளராத நம்பிக்கை, முயற்சி, திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றிப்பாதையில் பயணிப்பவர் அல்டிமேட்ஸ்டார் அஜீத். இவர்களைப் பற்றி ஒரு சுவாரசியமான கேள்வி பதில் ஒன்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

அஜீத்குமார் அவரோட உடல் எடையைக் குறைத்து பைக், கார் ரேசிங்ல காட்டுன ஆர்வத்தை சினிமாவுல காட்டியிருந்தா இன்னைக்கு விஜயை விட நல்ல படங்கள் வசூலை அவர் கொடுத்திருப்பாருன்னு தோணுது. ஏன் அவரு அதைப் பண்ணவே இல்லை. உண்மையிலேயே சினிமாவுல அவருக்கு நடிக்கிறது சலிச்சிப் போச்சான்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

Also read: ஆத்தாடி அம்புட்டு அழகு… இவ்வளவு சிம்பிளாவா? சித்தார்த்தை கரம் பிடித்த அதிதி ராவ்…

அஜீத்தோட மனநிலையைப் பற்றி உங்கள்ல பலருக்கும் சரியாகத் தெரியாதுன்னு தான் நான் நினைக்கிறேன். இது போன்ற போட்டிகளை எல்லாம் தவிர்க்கணும்னு நினைக்கிறவரு தான் அவர். அஜீத்தைப் பொருத்த வரைக்கும் ஜென் மனநிலையில் தான் பெரும்பாலும் அவர் இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story