சன்பிக்சர்ஸ் இல்லன்னா லைகா தான் ரஜினி சாய்ஸ்... வேற யாருமே தேவையில்லையா சூப்பர்ஸ்டாருக்கு?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் பொருத்தவரை சமீப காலமாக சன்பிக்சர்ஸ் அல்லது லைகா நிறுவனத்துடன் தான் படங்கள் நடித்து வருகிறார். அதிலும் பெரும்பாலான படங்கள் சன்பிக்சர்ஸ் தான். இதுக்கு என்ன காரணம்? தயாரிப்பாளர்களால அவர் கேட்குற சம்பளத்தைக் சன்பிக்சர்ஸ் இல்லன்னா லைகா தான் ரஜினி சாய்ஸ்... வேற யாருமே தேவையில்லையா சூப்பர்ஸ்டாருக்கு?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் பொருத்தவரை சமீப காலமாக சன்பிக்சர்ஸ் அல்லது லைகா நிறுவனத்துடன் தான் படங்கள் நடித்து வருகிறார். அதிலும் பெரும்பாலான படங்கள் சன்பிக்சர்ஸ் தான். இதுக்கு என்ன காரணம்? தயாரிப்பாளர்களால அவர் கேட்குற சம்பளத்தைக் கொடுக்க முடியாதது தான் காரணமான்னு நேயர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
எம்ஜிஆர் அதிகமான திரைப்படங்களில் நடிச்சதுன்னா அது சாண்டோ சின்னப்பா தேவரோட தேவர் பிலிம்ஸ் படங்களில் தான். ஏன்னா தேவர் பிலிம்ஸ் அதிபரான சின்ப்பா தேவருக்கும், எம்ஜிஆருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது.
நடிகர்களைப் பொருத்தவரைக்கும் அவங்களோட சம்பளத்தை எல்லாம் தாண்டி இது போல சவுகரியங்களும், புரிதலும் மிகஅவசியம்னு அவங்க நினைக்கிறாங்க. அதன் காரணமாகத் தான் தொடர்ந்து சன் பிக்சர்ஸின் பல படங்களில் ரஜினிகாந்த் பணியாற்றுகிறார்.
அவருக்கும் அந்த நிறுவனத்தின் கலாநிதி மாறனுக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. இதை எல்லாம் தாண்டிப் பார்த்தீங்கன்னா ரஜினியோட தீவிர ரசிகரா இருக்கிறார் கலாநிதி மாறன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்தே, ஜெயிலர், கூலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதே போல லைகா மூவீஸ் தயாரிப்பில் லால் சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேற்கண்ட படங்களில் ரஜினிகாந்த் தற்போது நடித்துக் கொண்டு இருக்கும் படங்கள் கூலி, வேட்டையன் ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஜெயிலர் 2 படத்துக்கான கதையும் தயார்நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.