Cinema News
சிவகார்த்திகேயன் ஆயுத பூஜை கொண்டாட்டம்!.. மனைவியை எங்கே காணோம் என ஆரம்பித்த நெட்டிசன்கள்!..
நடிகர் சிவகார்த்திகேயன் சந்தோஷமாக ஆயுத பூஜை கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சில நெட்டிசன்கள் அது சரி சிவகார்த்திகேயன் மனைவி மற்றும் குழந்தைகள் எங்கே காணோம் என்றும் சிவகார்த்திகேயன் கம்பெனியில ஒரு பெண் கூட இல்லையா? என்கிற கேள்விகளையும் தற்போது எழுப்பி சோஷியல் மீடியாவில் இன்னொரு சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: ஷிவானி வீட்ல ஆயுத பூஜை கொண்டாட்டம்!.. சாமிக்கு முன்னாடியும் இப்படியா காட்டு காட்டுனு காட்டுவீங்க!..
இசையமைப்பாளர் டி. இமான் கடந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் மீது திடீரென ஒரு குண்டை தூக்கிப் போட்டது ஒரு வார காலமாக இணையத்தில் மிகப்பெரிய இடியாக இறங்கி விட்டது.
பலரும் சிவகார்த்திகேயன் தப்பானவர் என்கிற அளவுக்கும் இனிமேல் யாருமே அவரை வீட்டுக்கு அழைக்கவே அஞ்சுவார்கள் என்றெல்லாம் அசிங்கப்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: அப்ப ரைட்ஸும் வாங்கலயா?!.. சைலைண்டா அந்த கதையை ஆட்டைய போட்ட லோகேஷ்…
மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் விவகாரம் காரணமாக அவரது மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயனிடம் பேசுவதே இல்லை என்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அப்பா வீட்டுக்குச் சென்று விட்டார் என்றும் ஏகப்பட்ட கட்டுக் கதைகள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.
சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பல விஜய் டிவி பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை இந்த விவகாரத்தில் தெரிவித்து இதுதான் சாக்கு என மைலேஜ் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மிலன் மறைவுக்கு பிறகு அவருக்காக ‘விடாமுயற்சி’ டீம் செய்த மிகப்பெரிய செயல்! வேற லெவலில் ரெடியாகும் தல
இந்நிலையில், அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் சந்தோஷமாக ஆயுத பூஜையை தனது அலுவலகத்தில் நடத்திய நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படங்களை அவரது தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வரும் கலையரசன் வெளியிட்டுள்ள நிலையில், அதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதுதான் ஹேட்டர்களுக்கு சரியான பதிலடி என ஷேர் செய்தனர்.
அந்த போட்டோக்களை பார்த்த சிவகார்த்திகேயன் ஹேட்டர்கள் சிவகார்த்திகேயன் மனைவி மற்றும் குழந்தைகள் ஏன் பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு பெண் பணியாளர் கூட இல்லையா? என்கிற கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.