நடிகர் சங்கம் கட்டப் போறேன்னு விஷால் சொல்லி பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்னமும் அதே பாட்டைத் தான் பாடி வருகிறார் என்றும் சுமார் 40 கோடி ரூபாய் சங்க கட்டடம் கட்டத் தேவைப்படுவதாகவும் அதற்காக வங்கியில் கடன் வாங்கப் போவதாகவும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்று மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி நடிகர்களுக்கான சங்க கட்டடம் கட்ட என்ன அவசியம் என பிரபலம் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகர் சங்கம் கட்டிய பின்னர் தான் திருமணம் செய்துக் கொள்வேன் என சொல்லி விட்டு நடிகர் விஷால் திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த பின்னர் அவரது திருமணம் தடைப்பட்டு நின்று போனது.
இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் தெறிக்குது.. வார நாட்களிலும் குறையாத கூட்டம்!.. ஜவான் 5ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..
ஆனால், இன்னமும் நடிகர் விஷால் திருமணம் செய்துக் கொள்ளவும் இல்லை. நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவும் இல்லை என கடுமையான விமர்சனங்களும் கிண்டல்களும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கூடிய விரைவில் நடிகர் சங்க கட்டடம் கட்ட சுமார் 40 கோடி ரூபாயை நிதியாகவும் வங்கியில் கடனாகவும் வாங்கி கட்டப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டப்பிங் பேசும் போதே உயிரிழந்த மாரிமுத்து!.. இப்போ யாரு தெரியுமா ஆதி குணசேகரனுக்கு டப்பிங் பேசுறது!..
100 கோடி சம்பளத்தை எல்லாம் தாண்டி ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் 200 கோடி சம்பளம் வாங்க ஆரம்பித்துள்ள இந்த நிலையிலும், நடிகர் சங்க கட்டடத்துக்கு ஏன் மக்களின் பணத்தை சுரண்ட நினைக்கிறீங்க என்கிற கேள்வியை வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் எழுப்பி உள்ளார்.
ரஜினிகாந்த், விஜய், அஜித் மற்றும் முன்னணி நடிகர்கள் இணைந்து ஆளுக்கொரு கோடி ரூபாயை கொடுத்தாலே அவர்களுக்கான சங்க கட்டடம் உருவாகி விடுமே இதை விடுத்து அதையும் மக்கள் தலையில் இவர்கள் படத்திற்கு விற்கப்படும் டிக்கெட்டுகள் மற்றும் பாப்கார்ன் கட்டணத்தை விட அதிகமாக மேலும், சுமையை இறக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…