Cinema History
வின்னர் படத்துல வடிவேலுவுக்கு பதிலா நடிக்க இருந்தது அவரா? அப்புறம் எப்படி மிஸ் ஆச்சு?
அரண்மனை 4 சுந்தர்.சி.யின் இயக்கத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த ஆண்டில் ஒரு தமிழ்ப்படமும் நல்லா ஓடலையே என்ற சினிமா ரசிகனின் குறையைப் பூர்த்தி செய்தது இந்தப் படம் தான். படத்தின் இயக்குனர் சுந்தர்.சி. சினிமா உலகில் நடந்த சில கலகலப்பான சம்பவங்களையும், அவருடன் இணைந்து நடித்த நகைச்சுவை நாயகர்கள் பற்றியும் சில கருத்துகளை இவ்வாறு சொல்கிறார். வாங்க, பார்க்கலாம்.
நானும் வடிவேலும் முதல்ல பண்ண வேண்டிய படம் உனக்காக எல்லாம் உனக்காக. அதுல கவுண்டமணி, விவேக் காம்பினேஷன். அப்போ வடிவேலு உன் டைரக்டர் படத்துல நான் நடிக்கப் போறேன் பாருன்னு அட்வான்ஸா வாங்கின செக்கை எல்லாம் காட்டி சொன்னாரு. ஆனா சில காரணங்களால அதுல விவேக் தான் நடிச்சாரு.
அதே மாதிரி வின்னர் படத்திலயும் விவேக் தான் நடிப்பதா இருந்தது. எனக்கும் அவருக்கும் சில மிஸ் அண்டர்ஸ்டேன்டிங்கால அவரு நடிக்க முடியாமப் போச்சு. அப்போ தான் முதன்முதலா வடிவேலு என் படத்துல நடிச்சாரு. அதுக்கு அப்புறம் எங்களுக்குள்ள நல்ல ரிலேஷன்ஷிப் ஆனது. அடுத்து தலைநகரம் படத்துல நடிச்சாரு.
நடிகர் சந்தானத்தை மாதிரி கடினமான உழைப்பாளி யாருமே இருக்க முடியாது. ஒரு சாதாரண சீனையும் காமெடியாக்கி அவரு ஸ்டைல்ல கலகலப்பாக்கி விடுவாரு. டைமிங் காமெடியில் அசத்துவார். சந்தானம் நடிக்க வந்த புதுசுல சாயங்காலம் வரை உட்கார்ந்துருந்தாரு. அப்போ அவரைப் பார்த்துக் கேட்டேன். இன்னும் என்னோட ஷாட் ஆரம்பிக்கவே இல்லை சார்னு சொன்னார். அப்போ டைரக்டர்கிட்ட சொன்னேன்.
இதையும் படிங்க… பி.வாசுவுக்காக முதன் முதலில் அந்த காரியத்தை செய்த ஜெயலலிதா! இப்படிலாம் நடந்திருக்கா?
சார் இவரை இவ்ளோ நேரம் காக்க வச்சிருக்கீங்க. நீங்க ஒருநாள் நீங்க இவரோட கால்ஷீட்டுக்குக் காத்துருக்க வேண்டிய நிலைமை வரும்னு சொன்னேன். அதே மாதிரி நடந்துச்சு. அதை சந்தானம் என்னைப் பார்க்கும் போது சொன்னார். சார் நீங்க அன்னைக்கு சொன்னது சார். நீங்க சொன்னது நிஜமாயிடக்கூடாதுன்னு நான் ட்ரை பண்றேன். என்னால ஒரு நாளு டைம் கொடுக்க முடியலன்னு சொன்னார் சந்தானம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.