Kollywood: தமிழ் சினிமாவில் சில முறையில்லாத விஷயத்துக்கு கொடி பிடித்துவிடுவார்கள். இதில் கொடுமையே ரசிகர்களும் அதை நம்பி அவர்களுக்கு லைக்ஸ் கொடுத்து விடுவது தான். அந்த வகையில் நம்மையே அறியாமல் துணை போன சில மோசமான விஷயங்கள்.
ரஜினிகாந்த் நடிப்பில் ரம்யாகிருஷ்ணன், செளந்தர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா. இப்படத்தில் வெளியூருக்கு போய் படித்து வரும் பெண்ணாக ரம்யா கிருஷ்ணன் நடித்து இருப்பார். படித்ததால் அவருக்கு அதிக திமிர் என்றும், படிக்காமல் இருந்த செளந்தர்யா ரொம்பவே அமைதியானவர் எனவும் காட்டப்பட்டு இருக்கும்.
இதையும் படிங்க: இந்நேரம் கேப்டன் மட்டும் உயிரோட இருந்தா சவுக்கடி நிச்சயம்! கம்முனு இருந்த பிரேமலதா
அதுமட்டுமல்லாமல் ஒரு காட்சியில் ரஜினி பொண்ணுக்கான அடையாளமாக சில விஷயங்களை சொல்லி இருப்பார். அதில் பொம்பள பொம்பளயா தான் இருக்கணும் எனப் பேசி முடித்து இருப்பார். இது எல்லாருக்கும் எப்படி சரியாக இருக்கும். ஒவ்வொரு பெண்களுக்கும் வாழ்க்கை வேறு மாதிரியாக தானே இருக்கும். அதை எப்படி ஒரே வரையில் அடக்கலாம்.
இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த எல்லா படங்களிலுமே ஒரு தப்பான கண்ணோட்டத்தை போற போக்கில் சொல்லி இருப்பார். முதல்வன் படத்தில் அர்ஜூனுக்கு ஒரு கல்லூரி மாணவி கால் செய்து குப்பத்து பசங்க தொல்லை தருவதாக சொல்லுவார். அது அந்த ஏரியா என்றாலே இப்படி தான் என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்து அதற்கு கைத்தட்டலும் வாங்கி விடுகிறார்கள்.
இதையும் படிங்க: சோ சொன்னதை கேட்டு அரசு விருதை வாங்க மறுத்த கண்ணதாசன்!.. காரணம் இதுதான்!..
அந்நியன் படத்திலும் ரவுடிகளை அந்த ஏரியா ஆட்களாக காட்டி இங்கையுமே அதே விஷயத்தினை ஷங்கர் கையாண்டு இருப்பார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவுக்கு இரண்டு மகள் இருப்பார்கள். அந்த இடத்தில் கூட நிறத்தை மோசமான கண்ணோட்டத்தில் காட்டி இருப்பார். இதை தவிர்த்து இருக்கலாம் என்பது பல ரசிகர்களின் எண்ணமாக இருந்தது.
ஐ திரைப்படத்தில் திருநங்கை விக்ரம் மீது காதல் ஆசை வைப்பார். ஆனால் அவரை சந்தானம் மோசமான கமெண்ட் அடித்து இருப்பார். அந்த காட்சிகள் அப்ளாஸ் தட்டினாலும் அது சமூகத்துக்கு தப்பான கருத்தை முன்வைப்பதாகவே இருக்கிறது. மேலும் பெரும்பாலான கோலிவுட் வில்லன்கள் ஒரு குறிப்பிட்ட ஏரியாவை சார்ந்தவர்களாவே காட்டப்படுவது வழக்கமாக இருக்கிறது.
இதையும் படிங்க: உடனே எனக்கொரு யானை வேணும்!.. கொண்டு வாங்க!.. தயாரிப்பாளரை கதிகலங்க வைத்த சிவாஜி!..
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…
GoatMovie: விஜய்…
சத்யராஜ் ஆரம்பகாலகட்டத்தில்…
நடிகர் அஜித்தின்…