உடம்பு முழுக்க சாமி காயிறு கட்டி என்ன பிரயோஜனம்?.. மட்டமான வேலையை பண்ணும் யோகிபாபு?..

Published on: October 21, 2023
yogi
---Advertisement---

Yogibabu: இன்று ஹீரோ, ஹீரோயின் கால்ஷீட் கிடைக்குதோ இல்லையோ இவர் கால்ஷீட் கிடைப்பதுதான் அரிதாக இருக்கின்றது. சின்ன பட்ஜெட் உள்ள படங்கள் முதல் பெரிய டாப் ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் வரை இவர் இல்லாமல் எந்த படமும் வெளியாவதில்லை.

யாரு? நம்ம யோகிபாபுதான். ஆரம்பத்தில் சண்டைக் கலைஞர்களில் ஒருவராகத்தான் வந்தார் யோகிபாபு. பெரும்பாலான படங்களில் வில்லன்கள் குரூப்பில் ஒருவராகத்தான் இருந்திருப்பார். அதன் பிறகு சைடு ஆக்டர், காமெடி ஆக்டர் என இப்போது  நகைச்சுவையில் ஒரு லீடு நடிகராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: ‘கைதி 2’வைத் தொடர்ந்து கார்த்தியின் அந்தப் படமும் இரண்டாம் பாகமா? போடு அடுத்த மரண பயத்தை காட்ட வராரே

தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தடம் பதித்தார் யோகிபாபு. ஜவான் படத்தில் நம்ம கிங்காங் ஷாரூக்கான் படத்திலேயே நடித்து இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக மாறியிருக்கிறார்.

சினிமாவில் பிரபலமாக இருக்கும் யோகிபாபு சரியான முருக பக்தர். எந்த ஊரில் எல்லாம் முருகன் கோயில் இருக்கிறதோ அங்கு தவறாமல் சென்று சாமி தரிசனம் செய்வது யோகிபாபுவின் வழக்கம்.

இதையும் படிங்க : காக்க காக்க படத்துக்கு கௌதம் வைக்க ஆசைப்பட்ட பெயர்..! அதுவே செமையா இருக்குமே!

மேலும் அவர் கை, கழுத்து என முழுவதும் சாமி கயிறை கட்டிக் கொண்டு அதீத கடவுள் நம்பிக்கை உள்ளவராக வலம் வருகிறார் யோகிபாபு. இதற்கிடையில் இவரை பற்றி சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

யோகிபாபுவுக்கு மேக்கப் கலைஞராக இருந்த ஒருவர் திடீரென வேலையில் இருந்து நின்றுவிட்டாராம். அவருக்கு தினமும் 8000 சம்பளமாம். தினமும் 8000 சம்பளம் வாங்குபவர் ஏன் வேலையில் இருந்து நின்றார் என்று கேட்க,

இதையும் படிங்க: குஷி படத்தில் ‘கண்டபடி கட்டிப்பிடி’ இதுக்கு என்ன அர்த்தம் சார்? பதிலை சொல்லி அதிர்ச்சி கொடுத்த வைரமுத்து

அவருக்குண்டான சம்பளத்தை அந்த நபரிடம் நேரடியாக கொடுக்கமாட்டார்களாம். யோகிபாபுவிடம்தான் கொடுப்பார்களாம். அவர் அதை வாங்கிக் கொண்டு அந்த நபருக்கு வெறும் 3000 ரூபாய்தான் சம்பளமாக கொடுக்கிறாராம்.

இதை ஒரு கட்டத்தில் தெரிந்து கொண்ட அந்த நபர் இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா? எவ்ளோ நம்பினேன் என்று மனவருத்ததில் வேலையில் இருந்து நின்றுவிட்டாராம். ஆனால் யோகிபாபு ஒரு படத்திற்கு ஒரு நாளைக்கு 11 லட்சம் சம்பளமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.