நடிகராக மட்டுமில்லாமல் அஜித் ஒரு கார் ரேஸராகவும் வலம் வருகிறார். கடந்த சில வருடங்களாகவே உலகின் பல இடங்களில் நடக்கும் கார் ரேஸ் போட்டிகளில் அஜித் கலந்து கொண்டு வருகிறார். இதற்காக அஜித்குமார் கார் ரேசிங் என்கிற ஒரு நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். இந்நிலையில்தான் அஜித்துடன் கார் ரேஸில் பொது மக்களும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
துபாய் ஆட்ரோட்ரோம் மைதானத்தில் வருகிற 26ம் தேதி கார் ரேஸ் நடைபெறவிருக்கிறது. இதில் அஜித்தும் கலந்துகொள்கிறார். அதில் அவருடன் நீங்கள் கார் ரேஸில் பங்கு பெற விரும்பினால் அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். இதற்காக துபாய் பணமதிப்பில் 3800 திர்ஹம்ஸ் அதாவது இந்திய மதிப்பில் 86 ஆயிரத்து 500 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டும். இதன் மூலம் அஜித் நேரில் சந்திக்கவும், அவருடன் கை குலுக்க்வும், அவருடன் உரையாடவு,ம் அவருடன் கார் ரேஸில் பயணிக்கும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இதை Taxi Raid அல்லது Ride with AK என அழைக்கிறார்கள். இந்த ரெய்டில் நீங்கள் பங்கேற்க ajithkumarracing.com என்கிற வெப்சைட் அல்லது துபாய் ஆட்ரோட்ரோம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு crm@ajithkumarracing.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ள வேண்டும்
.
அஜித்துடன் கார் ரேஸில் பயணிக்க சில கட்டுப்பாடுகள் உண்டு. 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் உடல் ஆரோக்கியம் உள்ளவராகவும் குறிப்பாக இதய நோய், முதுகுத்தண்டு பிரச்சனை இல்லாதவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.




