Categories: latest news

இனிமே பேச்சே இல்லை!.. ஒன்லி வீச்சு தான்!.. கோட் மியூசிக் பத்தி மாஸ் அப்டேட் கொடுத்த யுவன்!..

நடிகர் விஜய் நடித்த புதிய கீதை படத்துக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து கோட் படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில், அவரது அக்கா பவதாரிணி புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

இறுதிச்சடங்குகளை எல்லாம் முடித்து விட்டு சமீபத்தில் ஒரு விழாவில் நேற்று யுவன் சங்கர் ராஜா பங்கேற்றார். அப்போது அவரிடம் கோட் படத்தின் இசை குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: என்ன மனுஷன்யா தனுஷ்!.. மனைவி படத்துக்கு திடீர்னு இப்படியொரு ட்வீட் போட்டு அசத்திட்டாரே!..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வர உள்ள நிலையில், கடைசி 2 படங்கள் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அஜித்தின் மங்காத்தா மற்றும் சிம்புவின் மாநாடு உள்ளிட்ட படங்களுக்கு மாஸ் இசையை கொடுத்த யுவன் சங்கர் ராஜா பல ஆண்டுகள் கழித்து தளபதி படம் கிடைத்த சந்தோஷத்தில் தாறுமாறாக வேலை பார்த்து வருகிறாராம். இந்த முறை எதையும் சொல்லப் போவதில்லை என்றும் பேச்சே கிடையாது, ஒன்லி வீச்சு தான் என பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்.

இதையும் படிங்க: யார் கும்பிடுற சாமியா இருந்தாலும் சாமி சாமி தான்!.. லால் சலாம் டிரெய்லர் ஃபுல்லா ஃபயரா இருக்கே!..

மேலும், கோட் படத்தின் மியூசிக் பற்றி கேட்டதற்கு, இப்போ சொல்ல மாட்டேனே என ஜாலியாக பேசிய யுவன் சங்கர் ராஜா, சீக்கிரமே படத்தின் புரமோஷன் ஆரம்பிக்கும். அப்போது எல்லா அப்டேட்களும் ரசிகர்களுக்கு முறையாக கிடைக்கும். இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ரொம்பவே எக்ஸ்பெக்டேஷன் இருக்கும் என தெரியும். அதே அளவுக்கு எனக்கு எக்ஸ்பெக்டேஷன் இருக்கு, எல்லாமே நல்லா போயிட்டு இருக்கு என பேசியுள்ளார்.

 

 

Saranya M

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

8 minutes ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

11 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

19 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago