69வது பிலிம்பேர்!.. விருதுகளை அள்ளி குவித்த 12th Fail.. அப்படி என்ன கதை இது தெரியுமா?..

12th fail: இந்திய அளவில் சினிமா துறையில் மதிப்புமிக்க விருதாக பார்க்கப்படுவது பிலிம்பேர் விருது. தேசிய விருதுக்கு பின் இந்த விருதை பலரும் கவுரமாக நினைக்கின்றனர். இதுவரை 68 முறை இந்த விருது திரையுலகினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங் என பல பிரிவுகளின் கீழ் இந்த விருது அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 69வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று குஜராத்தில் துவங்கியது. இந்த முறையும் பல திரைப்படங்களை நடுவர் குழு பரிந்துரை செய்திருந்தனர். சிறந்த நடிகருக்கான பிரிவில் டன்கி, ஜவான் ஆகிய படங்களில் நடித்த ஷாருக்கானும், அனிமல் படத்தில் நடித்த ரன்பீர் கபூர் என சிலர் போட்டியில் இருந்தனர். அதேபோல், சிறந்த நடிகைக்கான பிரிவில் ஆலியா பட உட்பட சில நடிகைகள் போட்டியில் இருந்தனர்.

இதையும் படிங்க: பாலிவுட்டை காப்பாத்துனவருக்கே விருது இல்லையா!.. 6 விருதுகளை அள்ளிய அனிமல்.. கடுப்பான ஃபேன்ஸ்!..

அனிமல் படத்திற்கு சிறந்த நடிகர் (ரன்பீர் கபூர்), சிறந்த ஆல்பம், பின்னணி பாடகர், பின்னணி இசை, சவுண்ட் டிசைன், சிறந்த வளரும் இசை கலைஞர் என 6 விருதுகள் கிடைத்துள்ளது. அனிமல் படம் கடுமையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், நல்ல வசூலை பெற்றதோடு இப்போது விருதுகளையும் பெற்றுள்ளது.

அதேபோல், ஹிந்தியில் வெளியான 12th Fail திரைப்படமும் 6 விருதுகளை குவித்திருக்கிறது. யூ.பி.எஸ்.சி தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருந்தார் இப்படத்தின் இயக்குனர் விது வினோத் சோப்ரா. ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: இது வேற லெவல் ஸ்வேக்.. சுட சுட அப்டேட்டை அள்ளிக் கொடுக்கும் தல! வைரலாகும் புகைப்படம்

20 கோடியில் உருவான இந்த திரைப்படம் 60 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து தயாரிப்பாளருக்கு லாபத்தையும் கொடுத்துள்ளது. பிலிம்பேர் விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் (விமர்சகர் தேர்வு), சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் இப்படம் விருதுகளை வென்றுள்ளது.

இந்த படம் ஓடிடியில் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சினிமா விமர்சகளால் கொண்டாடப்பட்ட படமாகவும் 12th Fail படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பணத்தாசை பிடிச்ச இளையராஜா! மகள் கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருந்த நிலையிலும் ஆசை விடலயே

Related Articles
Next Story
Share it