வானத்தை போல விஜயகாந்தையே ஓவர்டேக் பண்ணிட்டாரே!.. விஜய் உருவாக்கிய அன்பு தம்பிகள்!.. வைரலாகும் வீடியோ மீம்!..

Published on: August 31, 2023
---Advertisement---

தமிழ் சினிமா மட்டுமில்லை இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குநர்களை அடுத்தடுத்து உருவாக்கி மாஸ் காட்டி வருகிறார் நடிகர் விஜய். அட்லீயில் ஆரம்பித்து லோகேஷ் கனகராஜ், நெல்சன் வரை இந்த பயணம் நீண்டுக் கொண்டே செல்கிறது.

ஏற்கனவே இந்த மூன்று இயக்குநர்களும் ஒன்றாக உரையாடும் போது விஜய் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது வீடியோ மீம் ஒன்று வேறலெவெலில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

அதே சமயம் சுமாரான இயக்குநர்களை எல்லாம் சூப்பர்ஸ்டார் இயக்குநராக மாற்றி வருகிறார் நடிகர் விஜய் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜயை தொடர்ச்சியாக இயக்க காத்திருக்கும் டாப் இயக்குனர்கள்.. அப்போ அரசியல் எண்ட்ரி அம்போவா! என்னப்பா இது!

அட்லிக்கு அண்ணன்:

எங்க அண்ணனுக்கு நான் தான் பண்ணுவேன் என தெறி, மெர்சல், பிகில் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லீ விஜய் கொடுத்த ஊக்கத்தால் தான் பாலிவுட்டுக்கு சென்று இப்போ ஷாருக்கானின் ஜவான் படத்தையே இந்த அளவுக்கு செய்துள்ளேன் என சமீபத்தில் நடந்த ஜவான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் பேசி விஜய் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக மயக்கி விட்டார்.

ஜவான் படத்துக்கு பிறகு அட்லீ எத்தனை வருஷம் ஆனாலும் வெயிட் பண்ணி அடுத்து விஜய் படம் தான் பண்ணுவார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தளவுக்கு அண்ணன் தம்பி பாண்டிங் இருவருக்கும் இடையே பக்காவாக வொர்க்கவுட் ஆகி உள்ளது கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: கால் சென்டர்ல கமல்ஹாசன்!.. அமெரிக்காவுல என்னை வேலை பண்ணிட்டு இருக்காரு பாருங்க ஆண்டவர்!..

லோகேஷ் கனகராஜையும் தூக்கி விட்டு:

மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு மாஸ்டர் பட வாய்ப்பை கொடுத்த நிலையில், அவரது ரேஞ்சே தற்போது எங்கேயோ போய்விட்டது.

கமல்ஹாசன் உடன் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், மீண்டும் லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினிகாந்த் படத்தையே இயக்க போகிறார். எல்லாத்துக்குமே விஜய் தான் காரணம் என்கின்றனர்.

இதையும் படிங்க: 600 கோடி வசூலையே நெருங்க திணறும் ரஜினி படம்!.. அசால்ட்டா அத்தனை கோடி பட்ஜெட்டில் நடிக்கும் கமல்?..

நெல்சனுக்கு நம்பிக்கை கொடுத்த விஜய்:

பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், மத்தவங்க சொல்றதை கேட்காத, உன்னாலே முடியாது என்று ஊரே சொல்லும் நம்பாதே ரஜினிக்கு போய் கதை சொல் எனக்கூறி ஜெயிலர் படத்தை எடுக்க வைத்ததும் விஜய் தான் என அவரும் மேடையில் பேசியுள்ளார்.

இப்படி தமிழ் சினிமாவில் மூன்று இளம் இயக்குநர்களை டாப் இயக்குநர்களாக மாற்றி உள்ளார் விஜய் என்பதை பாராட்டும் வகையில் வானத்தைப் போல வீடியோ மீமையே ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதில், மீனாவுக்கு பதில் அனிருத்தை போட்டு இருந்தால் இன்னமும் சூப்பராக இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.