Cinema News
வேட்டையனா வரச்சொன்னா ரஜினி பார்ட்- 2வா வந்து நிக்குற! வாசுவை திக்குமுக்காட வைத்த லாரன்ஸ்!..
Actor Rajini: ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன் ஆகியோர் நடிப்பில் வாசுவின் இயக்கத்தில் அமர்க்களப்படுத்திய திரைப்படம் சந்திரமுகி. இந்தப் படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்தது அனைவரையும் மிரளவைத்தது. படமும் வெளியாகி தொடர்ச்சியாக ஒரு வருடம் வெற்றிகரமாக ஓடியது.
மேலும் வசூலிலும் பணத்தை அள்ளியது. வாசுவின் இயக்கத்தில் பல படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கின்றது. அந்தவகையில் சந்திரமுகி திரைப்படம் யாரும் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. பாபா படத்தின் தோல்வியால் ரஜினி இனி அவ்ளோதான் என்று சொல்லிக் கொண்டிருந்த ஊடகங்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார் ரஜினி.
இதையும் படிங்க : நயனுக்கு அதிகரித்த பணத்தாசை… ப்ரமோட் தான் பண்ணல… ஃபாலோ கூடயா பண்ணாம இருப்பீங்க!
இந்த நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் வாசு இறங்க அதில் ரஜினி நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். அதன் பிறகே லாரன்ஸ் ரஜினியிடம் ஆசி பெற்று விட்டு இந்தப் படத்தில் இணைந்தார்.
சந்திரமுகி 2ஆம் பாகத்தில் வேட்டையனாக வரும் லாரன்ஸுக்கு டஃப் கொடுக்கும் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். மேலும் வடிவேலுவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். லைக்கா தயாரிப்பில் உருவாகும் சந்திரமுகி 2 படத்தின் ஓடிடி விற்பனை 27 கோடிக்கு விற்பனையாகியிருக்கின்றதாம்.
இதையும் படிங்க : கிடைச்ச கேப்ல சத்யராஜுக்கே விபூதி அடித்த மம்முட்டி.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!…
இந்த நிலையில் லாரன்ஸ் இந்தப் படத்திற்குள் நுழைந்ததும் ரஜினியின் ஹேர் ஸ்டைல், உடை , நடை என எல்லாமே ரஜினியை பிரதிபலித்த மாதிரியே இருந்ததாம். சந்திரமுகியில் வேட்டையனாக வரும் ரஜினியை அப்படியே ஃபாலோ செய்து வந்து நின்றாராம் லாரன்ஸ்.
ஆனால் இது வாசுவுக்கு பிடிக்கவில்லையாம். இப்படி இருந்தால் ரஜினி ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்று சொல்ல லாரன்ஸுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டதாம். ஆனாலும் நடிக்கும் போதெல்லாம் லாரன்ஸிடம் ரஜினி அவ்வப்போது வந்து வந்து போனாராம்.
இதையும் படிங்க : ரஜினிக்கு இவ்வளவோ கஞ்சத்தனம் ஆகாதுப்பா… இந்த விஷயத்துல கமல், அஜித்லாம் க்ரேட்ல!
அதனால் படப்பிடிப்பில் லாரன்ஸை கண்ட்ரோல் செய்வது என்பது மிகவும் கடினமாகி விட்டது என்று வாசு கூறினார். மேலும் வடிவேலுவின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்றும் கூறினார்.