Cinema History
எம்.ஜி.ஆரை முதன்முறை பார்த்தபோதே கணித்த கண்ணதாசன்!.. அட எல்லாமே அப்படியே நடந்துச்சே!…
Actor MGR: எம்.ஜி.ஆரின் வரலாற்றை எழுதினால் அது கண்ணதாசன் இல்லாமல் முற்றுப்பெறாது. அதேபோல், கண்ணதாசனின் வாழக்கையை எழுதினால் அதில் எம்.ஜி.ஆர் இருப்பார். காரணம் இருவரின் வாழ்க்கையிலும் இருவருமே முக்கிய பங்கு வகித்தவர்கள். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் கண்ணதாசன்.
அதேபோல், தான் நடிக்கும் படங்களில் கண்ணதாசனுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் எம்.ஜி.ஆர். இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. எம்.ஜி.ஆரின் பல படங்களில் பல அற்புதமான, காலத்திற்கும் மறக்க முடியாத பாடல்களை கண்ணதாசன் கொடுத்துள்ளார். காதல், தத்துவம் என பல பாடல்களை எம்.ஜி.ஆருக்கு அவர் எழுதியிருக்கிறார்.
இதையும் படிங்க: 18 நாட்களில் முடிக்கப்பட்ட படம்… எம்.ஜி.ஆர் ராசியால் 100 நாட்கள் ஓடிய அதிசயம்.. என்ன படம் தெரியுமா?
அதேநேரம், அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய நேர்ந்தது. கண்ணதாசன் காங்கிரஸை சேர்ந்தவர். எம்.ஜி.ஆரோ திராவிட கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். எனவே, பல அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். சில வருடங்கள் எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும் பேசாமலே கூட இருந்தனர். அதனால், வாலியை வைத்து தனது படங்களுக்கு பாடல்களை எழுத வைத்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் முதல்வரான பின் தமிழக அரசின் அரசவை கவிஞராக கண்ணதாசனை நியமித்தார். இதை அறிந்து நெகிழ்ந்து போன கண்ணதாசன் நேரில் சென்று எம்.ஜி.ஆருக்கு நன்றி சொன்னார். அதேபோல், கடனில் சிக்கிய கண்ணதாசனுகு எம்.ஜி.ஆர் பல வகைகளில் உதவியும் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: கடனில் சிக்கிய சிவாஜி பட இயக்குனர்!.. கை கொடுத்து தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..
எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளை ஒருமுறை பகிர்ந்து கொண்ட கண்ணதாசன் ‘1941ம் வருடம் அசோக்குமார் என்கிற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்தார். சென்னை வால்ட் டாக்ஸ் சாலையில் உள்ள ஒத்தவாடை எனும் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யா மற்றும் அண்ணன் சக்கரபாணியுடன் வசித்து வந்தார்.
அவரை பார்க்க நானும் கலைஞர் கருணாநிதியும் சென்றிருந்தோம். அப்போதுதான் எம்.ஜி.ஆரை முதன் முதலில் நேரில் பார்த்தேன். இவர் கதாநாயகனாக நடிக்க வேண்டியவர். அப்படி நடித்தால் பெரிய நடிகராக வருவார் என நினைத்தேன். என் கணிப்பு வீண்போகவில்லை. எம்.ஜி.ஆர் பெரிய நடிகராக மாறினார்’ எனவும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: உலகம் சுற்றும் வாலிபன் படத்திலிருந்து ஜெயலலிதாவை தூக்கிய எம்.ஜி.ஆர்!. காரணம் என்ன தெரியுமா?…