ஒரு வேளை ‘சமுத்திரம் 2’ படமா இருக்குமோ? தளபதி 68ல் அதிரிபுதிரியாக நுழைந்த சூப்பர் ஹிட் பட நாயகி

Published on: October 27, 2023
vijay
---Advertisement---

Thalapathy 68: விஜய் இப்போதுதான் லியோ படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படம் வெளியாகி ஓரளவு வசூலை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே லியோ அமைந்தது.

பக்கா ஆக்‌ஷன் படமாக அமைந்த லியோ திரைப்படத்தை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். அடுத்ததாக தளபத் 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய். ஏற்கனவே பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கிய வெங்கட் பிரபு லோகேஷ் மாதிரி இந்தப் படத்திலும் சொதப்பாமல் இருந்தால் சரி என்று ரசிகர்கள்  கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் நைட் பார்ட்டியில் என்ன நடந்தது.. பகீர் கிளப்பும் பத்திரிக்கையாளர்… ப்ரின்ஸ் நிலைமை படுமோசம்..!

விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, யோகிபாபு, பிரேம்ஜி மற்றும அவரது நண்பர்கள் , மோகன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இந்த கூட்டத்தை பார்க்கும் போது ஒரு வேளை இன்னொரு வாரிசாக இருக்குமோ என்றும் கலாய்த்து வந்தனர்.

விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கும் இந்தப் படத்தில் இள வயது கேரக்டர் விஜய்க்கு ஒரு தங்கை கதாபாத்திரத்தில் ஒரு நடிகை நடிக்கிறாராம். படத்தில் இந்த தங்கை கதாபாத்திரம்தான் மெயினாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: நயனுக்கு பாலிவுட்டில் குவியும் வாய்ப்புகள்… அடுத்த பட சம்பளம் இவ்வளவோ?

இந்த செய்தியை பார்த்தும் ரசிகர்கள் என்னங்கடா டேய்! சமுத்திரம் படத்தை கண்ணுல காட்டிராதிங்கடா என்றும் கூறிவருகிறார்கள். அதனால் அந்த தங்கை கதாபாத்திரத்திற்கு ஒரு பிரபலமான நடிகையை போட்டால் சிறப்பாக இருக்கும் என கருதி,

லவ் டுடே படத்தின் நாயகியான இவானாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. கூடவே விஜயின் நண்பர் கேங்கில் அனிருத்தின் சகோதரரான ரிஷியும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ரிஷி ஏற்கனவே வேலையில்லாத பட்டதாரி படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய்க்கு வில்லனா நடிச்சாச்சு! அடுத்து யாரு? அவர்தான் – சூப்பரான அப்டேட்டை கொடுத்த நடிப்பு அரக்கன்