Cinema News
ஜெயிலர் என்ன? பொன்னியின் செல்வன் ரிக்கார்டையே பிரேக் செஞ்ச லியோ!
Leo Movie: விஜய் நடிப்பில் கலெக்ஷனை அள்ளி வரும் திரைப்படம் லியோ. படம் வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எப்போதும் போலவே கல்லா கட்ட தொடங்கினார் விஜய். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து மொத்தமாக 400 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது.
இதனால் சமீபத்தில் இதன் வெற்றிவிழாவை ஒட்டுமொத்த படக்குழுவும் சேர்ந்து கொண்டாடினார்கள்.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் லியோ படத்திற்கான வெற்றிவிழா நடைபெற்றது.திரையுலகை சேர்ந்த பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்கள்.
இதையும் படிங்க: பாத்ரூமில் வேண்டாத வேலை பார்த்த பிரதீப்! சரியான தண்டனையை கொடுத்த கமல்..
இந்த நிலையில் புதியதாக லியோ திரைப்படம் ஒரு புதிய சாதனையை படைத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி உலா வருகின்றது. அதாவது தமிழ் நாட்டில் முதன் முதலில் 100 கோடி வினியோகஸ்தரர்களுக்கு ஷேர் கொடுத்த படமாக லியோ திரைப்படம் அமைந்திருக்கிறதாம்.
இதற்கு முன்பு வரை பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் மிகப்பெரிய கலெக்ஷன் என்று கூறிவந்தார்கள். ஆனால் அதையெல்லாம் ஓவர்டேக் செய்து லியோ திரைப்படம் புதிய ரெக்கார்டை ஏற்படுத்தியிருக்கிறதாம். பொன்னியின் செல்வன் திரைப்படம் 97 கோடியாக ஷேரும் அதன் பின் ஜெயிலர் திரைப்படம் 92 கோடியாகவும் இருந்ததாம்.
இதையும் படிங்க: கமல் கேட்ட கேள்வியில் ஆடிப்போன தயாரிப்பாளர்…. அப்படி என்னதான் கேட்டாரு?
இதையெல்லாம் தாண்டி 100 கோடி வினியோகஸ்தரர்களுக்கு ஷேராக லியோ திரைப்படத்தால் போய்ச் சேர்ந்திருக்கிறதாம்.ஆனால் மொத்த வசூலின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் 211 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
ஆனால் லியோ திரைப்படம் அதை நெருங்கவில்லை. இருந்தாலும் எப்படி லியோ 100 கோடி ஷேர் வந்தது என்று பார்க்கும் போது ஒரு பக்கம் 20% 80% டிலீங். இன்னொரு பக்கம் பொன்னியின் செல்வன் ரிலீஸ் நேரத்திலேயே மணிரத்தினம் கறாரா டிக்கெட் விலை 190ரூபாய்க்குத்தான் விற்க வேண்டும் என சொன்னது. இதன் காரணமாகத்தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் அந்த சாதனையை எட்ட முடியாமல் போனதாக கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.
இதையும் படிங்க: சூப்பர் ஜோடி!. ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த சிவாங்கி – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படம்