தளபதி 68 பட டைட்டில் ரெடி!.. டிக் செய்த விஜய்!. எப்போ சொல்றாங்க தெரியுமா?..

Published on: November 23, 2023
---Advertisement---

Thalapathy: லியோ படம் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்றாலும் அதை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் தனது அடுத்த பட வேலையை பார்க்கபோய்விட்டார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இது விஜயின் 68வது திரைப்படமாகும்.

இந்த படத்தில் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாக்‌ஷி சவுத்ரி, அஜ்மல், ஜெயராம் என பலரும் நடித்து வருகிறார்கள். வெங்கட்பிரபு இயக்கும் படம் என்றாலே நட்சத்திர கூட்டங்கள் அதிகமாக இருக்கும். இதற்கு இந்த படமும் விதிவிலக்கல்ல. இந்த படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: மன்சூர் அலிகான் தப்பா ஒண்ணுமே பேசல!.. கிஸ் சீன் பத்தி ஹீரோயின் கேட்க மாட்டாங்க.. ரேகா நாயர் விளாசல்!

இது ஒரு டைம் டிராவல் கதை எனவும், இல்லை இது ஹாலிவுட் பட ஸ்டைலில் குளோனிங் சம்பந்தப்பட்டது என்றும் சொல்ல முடிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் தாய்லாந்தில் நடைபெற்றது. இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளிநாடு செல்லவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

படப்பிடிப்பு துவங்கி இவ்வளவு நாட்களாகியும் இப்படத்தின் தலைப்பை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது அதற்கான நேரம் கூடிவந்துவிட்டது. 4 தலைப்புகளை யோசித்து விஜயிடம் சொல்லியிருக்கிறார் வெங்கட்பிரபு.

அதில், ஒன்றை விஜய் டிக் அடித்துவிட்டாராம். எனவே, வருகிற டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு உலகமே புது வருடத்தை வரவேற்கும்போது டிவிட்டரில் தளபதி 68 படத்தின் தலைப்பை அறிவிக்கவுள்ளனராம். எனவே, தனது ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கும் புத்தாண்டு பரிசாக தலைப்பு வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: நடிகையை வழிக்குக் கொண்டு வர இயக்குனர் போட்ட திட்டம்… ஆனால் நடந்ததுதான் ஹைலைட்..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.