Cinema History
தனுஷை போல அஜித்தை மாற்றுவாரா வெற்றிமாறன்?!.. இனிமே வேற ரூட்டில் பயணிப்பாரா ஏகே?…
Ajithkumar: சில நடிகர்கள் ஒரே மாதிரி கதைகளில் நடித்து வருவார்கள். அப்போதுதான் அவரை வைத்து ஒரு சிறந்த இயக்குனர் ஒரு சிறந்த படத்தை கொடுப்பார். அந்த படத்திலிருந்து அந்த நடிகர் மீது ரசிகர்களுக்கு இருந்த இமேஜே மாறிவிடும். ரஜினி படம் என்றால் பக்கா மசாலாதான். காமெடி, பாட்டு, வில்லன் என தூள் பறக்கும்.
ஆனால், அவரை தளபதி திரைப்படத்தில் மணிரத்தினம் காட்டிய விதம் யாரும் அதற்கு முன்பு செய்யாதது. ரஜினி இப்படி கூட நடிப்பாரா என பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருப்பார். ஆனால், அதன்பின்னர் ரஜினி அந்த ரூட்டில் பயணிக்கவில்லை. வழக்கம்போல், தனது ஸ்டைலுக்கு திரும்பிவிட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா ஆஸ்த்தான இயக்குனர்? அப்போ வெற்றிமாறன்
அதேபோல் அர்ஜூன் படமென்றால் கதை பெரிதாக இருக்காது. சண்டை காட்சிகள் மட்டுமே சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்த நேரத்தில் அவரை வைத்து ஜென்டில்மேன் படத்தை கொடுத்தார் ஷங்கர். அதேபோல், முதல்வன் படத்திலும் அர்ஜூனுக்கு நல்ல வேடம் கிடைத்தது. ரசிகர்களிடம் அவருக்கு இருந்த இமேஜும் மாறியது.
அதேபோல்தான் மசாலா படங்களில் நடித்து வந்த தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை கொடுத்தவர் வெற்றிமாறன். வெற்றிமாறன் படங்களில் நடித்த பின்னர்தான் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதையை வாங்கினார். சினிமா உலகில் சிறந்த நடிகராக தனுஷ் பார்க்கப்பட்டார்.
இதையும் படிங்க: அஜித் கழட்டிவிட்டா இப்படியா ட்ரீட் பண்ணுவீங்க!.. விக்னேஷ் சிவனுக்கு குடைச்சல் கொடுக்கும் பிரதீப்!..
இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அது வாடிவாசல் படமாக இருக்க வாய்ப்பில்லை. புதிய கதை என சொல்லப்படுகிறது. அஜித் இப்போது ஸ்டைலீஸ் மற்றும் மாஸ் ஹீரோவாக மட்டுமே வலம் வருகிறார்.
ஒருவேளை வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்தால் கண்டிப்பாக அவரை வேறுமாதிரி காட்டிவிடுவார் வெற்றிமாறன். கண்டிப்பாக அஜித் இப்படியும் நடிப்பாரா என ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துவிடுவார். அதன்பின் அஜித் நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதைகளில் மட்டும் நடிப்பாரா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: தப்பா பேசிய பப்லு… ஆனால் அவருக்கு அஜித் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பு.. மாஸ் தல நீங்க..!