கல்யாணத்துக்கு முன்னாடி இத செஞ்சே ஆகணும்!.. விஜயகாந்துக்காக மாஸ் காட்டிய இப்ராஹிம் ராவுத்தர்…

Published on: December 12, 2023
viji
---Advertisement---

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மதுரையில் இருந்து வந்த விஜயகாந்த் கிடைக்கிற ரோலில் நடித்து வந்தார். ஒரு சில படங்களில் துணை நடிகராகவும் வில்லனாகவும் நடித்தார் விஜயகாந்த்.

அதன் பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார். பொதுவாகவே எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்கள் புரட்சிக்கரமான கருத்துக்களை எடுத்துரைப்பதாகவே அமையும்.

இதையும் படிங்க: அவர் முன்னாடி ஹாலிவுட் நடிகர்லாம் சும்மா!.. சிவாஜியே பாராட்டிய நடிகர் யார் தெரியுமா?..

அதை விஜயகாந்த் மூலமாக பார்த்த ரசிகர்களுக்கு எம்ஜிஆருக்கு அடுத்த படியாக ஒரு நாயகன் உதயமாகிறார் என்ற எண்ணத்தை வரவழைத்தது. அதற்கேற்றாற்போல் விஜயகாந்தும் ஏழை எளிய மக்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்டவராகவும் இருந்தார்.

எதார்த்தமாக மக்களோடு மக்களாகவே உரையாடி வந்தார். இந்த நிலையில் விஜயகாந்தின் திருமணம் நெருங்கியது. திருமணத்திற்கு முன்புவரை தொடர்ந்து 11 படங்கள் அட்டர் ஃப்ளாப் ஆனதாம். அதனால் அவருடைய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் திருமணத்திற்கு முன்பு எதாவது ஒரு பெரிய ஹிட்டை கொடுத்தாக வேண்டும் என எண்ணினாராம்.

இதையும் படிங்க: அடுத்த அலப்பறையை கிளப்பலாமா!.. தலைவர் 170 டைட்டில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. கொண்டாட்டம் உறுதி!..

அந்த நேரத்தில் புலன் விசாரணை திரைப்படம் தயாரிப்பு பணியில் இருக்க செல்வமணியிடம் இப்ராஹிம் ராவுத்தர் அந்தப் படத்தில் சில காட்சிகளை இன்னும் பிரம்மாண்டமாக எடுக்க சொல்லியிருக்கிறார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும் என தன் உயிர் நண்பனுக்காக மிகவும் மெனக்கிட்டாராம் இப்ராஹிம்.

அவர் நினைத்ததை போலவே திருமணத்திற்கு முன்பு அந்தப் படத்தை ரிலீஸ் செய்து மிகப்பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறார் விஜயகாந்த். இதற்கு முழு காரணமாக இருந்தது அவருடைய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர்.

இதையும் படிங்க; ‘பார்க்கிங்’ படத்தில் அந்த சீன்! சிவாஜி இல்லைனா அத செஞ்சிருக்க முடியாது – பாஸ்கர் சொன்ன சீக்ரெட்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.