விஜயகாந்தை அழிக்க திட்டமிட்ட ஒரே நடிகர்! கேப்டனின் செல்வாக்கு தெரியாமல் சரண்டர் ஆனதுதான் மிச்சம்

Published on: December 25, 2023
viji
---Advertisement---

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் மக்கள் மனதை பெரிதும் கொள்ளை கொண்டவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என அனைவராலும் அன்பால் அழைக்கப்படுபவர். ஆரம்பத்தில் வில்லனாகவும் துணை நடிகராகவுமே சினிமாவில் நடித்து வந்தார்.

எஸ்,ஏ.சந்திரசேகர்தான் விஜயகாந்தின் இந்த வளர்ச்சிக்கு விதை போட்டது. எஸ்.ஏ.சந்திரசேகரின் பல புரட்சிக்கரமான கருத்துக்கள் நிறைந்த படங்களில் நடித்ததன் மூலம் எம்ஜிஆர் இல்லாத குறையை முற்றிலும் தீர்த்து வைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: எத்தன பேரு காலி ஆகப்போறானோ!.. கேப் விடாம வெறியேத்தும் யாஷிகா ஆனந்த்..

ஏழை மக்களிடம் கருணை கொண்டவராக நடந்து கொண்ட விஜயகாந்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இது ஒரு கட்டத்தில் ரஜினிக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தியதாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

தன்னுடைய நிறம், தோற்றம் கொண்ட ஒருவர் சினிமாவில் வளர்ச்சியடைவதை பார்த்த ரஜினியால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். அதனால் அவரின் வளர்ச்சியை அழிக்க பல வழிகளில் ரஜினிகாந்த் முயற்சித்ததாக கூறினார்.

இதையும் படிங்க: தாலி கட்டும் நேரத்தில் விரைந்த போலீஸார்! அந்த நடிகர் கொடுத்த புகார் – அதிரிபுதிரியாக நடந்த போண்டாமணி திருமணம்

ஒன்று அவரை அழிக்க வேண்டும். அல்லது அவரை சினிமாவில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று  நினைத்துக் கொண்டிருந்தவர் ரஜினி என அந்த பத்திரிக்கையாளர் கூறினார். ஆனால் அது நடக்க முடியாமல் போக வேறு வழியில்லாமல் விஜயகாந்திடம் சரணடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

ரஜினியின் குணமே இதுதானாம். ஒருவரை எதிர்க்கும் போது அது முடியாத பட்சத்தில் சரணடைந்து விடுவார் என்றும் இது ஒரு சுய நலம் என்றும் அந்த பத்திரிக்கையாளர் கூறினார். சினிமாவில் சுய நலம் பிடித்த ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: வார்னிங் கொடுத்த சிவாஜி… கோபப்பட்ட இயக்குனர்.. கடைசில தோல்வியை சந்திச்சதுதான் மிச்சம்…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.