Connect with us
poornima

Bigg Boss

பெட்டியை தூக்கிய பூர்ணிமா! சமூக வலைதளத்தில் கிழித்துத் தொங்கவிட்ட பிரதீப் – இன்னும் இவர் அடங்கலயா?

Biggboss Season 7: பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. கடந்த மூன்று நாள்களாகியும் இன்னும் அந்த பணப்பெட்டியை யாரும் தூக்கவில்லை. ஆனால் இன்றைய எபிசோடில் பூர்ணிமாதான் பணப்பெட்டியை தூக்க இருக்கிறார். பணப்பெட்டியில் ஆரம்பத்தில் ஒரு லட்சமாக இருந்தது.

அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது 16 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் பூர்ணிமா பெட்டியை தூக்கியது ஒளிபரப்பப்படுகிறது. இதுவரை இல்லாத சீசனில் இந்த சீசனில் அதிக தொகையை எடுத்துக் கொண்டு போகும் போட்டியாளராக பூர்ணிமா இருப்பார்.

இதையும் படிங்க: ஒரே படத்தோடு காணாமல் போன நடிகர் இவர் தான்… அப்புறம் என்ன ஆனார் தெரியுமா?

ஆனால் பூர்ணிமாதான் பெட்டியை தூக்குவார் என கடந்த இரண்டு நாள்களாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. நேற்று இரவுதான் அது உண்மை என்று தெரியவந்தது. அதனால் இது தெரிந்ததும் சக போட்டியாளரான ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் தன்னுடைய X தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது பூர்ணிமாவின் அம்மாகிட்ட கொடுத்த வாக்கு. அதனால்தான் நான் அமைதியாக இருக்கிறேன். கூலிக்கு  மார் அடிக்கிற கும்பல் எல்லாம் இஷ்டத்துக்கு பேசி வாயை கிளறாதீங்க. நான் மற்றவர்களின் கேரக்டரை கெடுத்து விளையாடுபவன் இல்லை. அது என் வேலையும் கிடையாது என்று பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: அண்ணனை போல யாரும் இல்ல! விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா! வைரலாகும் புகைப்படம்

இதை பார்த்ததும் நெட்டிசன்கள் அப்படி என்ன பூர்ணிமாவின் அம்மாகிட்ட பிரதீப் வாக்கு கொடுத்திருப்பார் என்று புலம்பி வருகின்றனர். இன்னும் சிலர் எதுக்கு உங்களுக்கு வேண்டாத வேலை. பட வாய்ப்பு இருந்தால் பாருங்கள். என்று அவருக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

ஆனால் பிரதீப் ரெட் கார்டு கொடுத்த வெளியேற்றப்பட்டதற்கு விதை போட்டதே பூர்ணிமாதான். அதனால் அவர் பணப்பெட்டியை எடுத்ததும் அந்த வயித்தெறிச்சலில் பிரதீப் இப்படிபோட்டிருப்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விடாமுயற்சி படக்குழுவுக்கு கொடுத்த ஷாக்கை ஏற்கனவே தன்னுடைய ஹிட் இயக்குனருக்கும் அஜித் கொடுத்திருக்கிறாராம்?

Continue Reading

More in Bigg Boss

To Top