விஜயகாந்துக்கும் எனக்கும் திருமணம்!… ராதிகா சொன்ன அந்த விஷயம் நடக்காமல் போக காரணம் தெரியுமா?

Published on: January 17, 2024
---Advertisement---

Vijayakanth: விஜயகாந்துக்கும், ராதிகாவுக்கு இருந்த காதல் கதையில் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்து இருக்கிறது. ஆனால் திருமணம் வரை போய் கூட இருவருக்கும் அந்த வாழ்க்கை நடக்கவில்லை. அப்படி என்ன நடந்து இருக்கும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிக்க தொடங்கிய போது அவர் முதலில் ரஜினி ஸ்டைலை தான் செய்து வந்தார். இருந்தும் அவருக்கு ரஜினி, கமலுக்குமான அடுத்த இடம் கிடைத்தது. அப்போது விஜயகாந்துடன் நிறைய படங்களில் இணைந்து நடித்தவர் ராதிகா. விஜயகாந்தை ஸ்டைலாக மாற்றியவரும் ராதிகா தான்.

இதையும் படிங்க: கேப்டன் மில்லரில் அதிக சம்பளம் வாங்கிய 5 நடிகர்கள்!.. சிவ்ராஜ்குமாருக்கு இத்தனை கோடியா?!..

அப்படி ஒரு பேட்டியில் ராதிகாவிடம் கேட்ட போது, எங்கள் இருவருக்கும் காதல் உண்மை தான். திருமணம் குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் எனக் கூறி இருந்தார். ஆனால் அப்படி விஜயகாந்திடன் ஒரு அறிவிப்பே வரவில்லை. அதன் பின்னர் ராதிகா பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடத்தில் விவகாரத்து பெற்றார்.

இதையும் படிங்க: ஆபிஸ் மூடிய விஷயத்தை சொல்ல முடியாமல் திணறும் கோபி!… மாட்டிக்கிட்டா என்ன பண்ணுவாரோ!

இருவருக்குமே உண்மையான காதல் இருந்ததாம். ராதிகாவை திருமணம் செய்ய விஜயகாந்த் தயாராக இருந்த போது கூட நண்பர்களான லியாகத் அலி, ராவுத்தர் உங்க இருவரின் ஜோசியமும் ஒத்துப்போகவில்லை. அதனால் அவர் உனக்கு வேண்டாம் என்றார்களாம். அதுமட்டுமல்லாமல் விஜயகாந்தின் அக்காவும் அந்த காதலுக்கு நோ சொல்லிவிட்டாராம்.

இதனை தொடர்ந்தே ராதிகாவிடம் இந்த காதல் வேண்டாம் என்றாராம் விஜயகாந்த். திருமண புடவை வரை எடுத்து வைத்த ராதிகா மனமுடைந்து ரொம்பவே உளைச்சலில் ஆளாகி பின்னர் மீண்டு வந்ததாக தகவல்கள் கிசுகிசுக்கிறது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் ஜெய்சங்கர் கொடுத்திருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.