Cinema History
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நான் செய்தது பெரிய தப்பு!.. பல வருடங்கள் கழித்து சொன்ன பாரதிராஜா..
பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் என இரண்டு பக்கா கிராம படங்களை இயக்கி ஹிட் கொடுத்த பாரதிராஜா மூன்றாவதாக இயக்கிய திரைப்படம்தான் சிகப்பு ரோஜாக்கள். பாரதிராஜா அந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், முதல் இரண்டு படங்களுக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.
சிறு வயதில் ஒரு மோசமான பெண்ணால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் தன்னை அரவணைத்த ஒரு பெரிய பணக்காரருக்காக பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் சந்தோஷமாக இருப்பான். அந்த வீடியோவை அந்த பணக்காரர் பார்த்து ரசிப்பார். அந்த சைக்கோ இளைஞன் வாழ்வில் ஒரு நல்ல பெண் வருகிறாள். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இதையும் படிங்க: கமல் ரத்த வாந்தி எடுத்தான்.. பாரதிராஜா சொன்ன அதிர்ச்சி சம்பவம்…
இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பாரதிராஜா ‘சிட்டி சப்ஜெட் கதைகளை என்னால் இயக்க முடியாது என சொன்னார்கள். அந்த கோபத்தோடு இயக்கிய படம்தான் சிகப்பு ரோஜாக்கள். இந்த கதையை இரண்டு பெரிய ஹீரோக்களிடம் சொன்னேன். நடிக்க முடியாது என சொல்லிவிட்டனர். கமல்தான் உடனே சம்மதித்தார். புதுமையானவற்றை செய்வதில் கமல் அப்போதே அப்படித்தான்.
தி.நகரில் ஒரு பங்களாவை கண்டுபிடித்து கமலை பேச வைத்து அனுமதி வாங்கி அதில் படத்தை எடுத்தேன். அப்படத்தில் நடித்த கருப்பு பூனையை கண்டிபிடிக்க போதும் போதும் என்றாகிவிட்டது. 2 நாள் நடித்த அந்த பூனை 3வது நாளில் காணாமல் போய்விட்டது. பூனைக்கு சொந்தக்காரர் கோர்ட்டில் கேஸ் போட்டார். அவரை சமாதனப்படுத்தி வழக்கை வாபஸ் வாங்க வைத்தேன்.
இதையும் படிங்க: ஹீரோவை தேடித்தேடி ஓய்ந்து போன பாரதிராஜா!.. விபத்து மூலம் கிடைத்த ஹீரோ.. இது நவரச நாயகன் கதை!..
இந்த படத்தில் ஒரு பெரிய தவறை நான் செய்திருப்பேன். கமலுக்கு என்ன பிளாக்ஷ்பேக் என்பதை அவரின் பார்வையில்தானே சொல்லவேண்டும். ஆனால், ஒரு அறையில் ஸ்ரீதேவி போய் விழுந்ததும் அங்கிருக்கும் பொருட்களை அவர் பார்த்தபின் பிளாஷ்பேக் துவங்கும். ஆனால், சாமார்த்தியமாக அதை மறைத்துவிட்டேன். அதுதான் சினிமாவின் மேஜிக்.
20 நாட்களில் அப்படத்தை எடுத்து முடித்துவிட்டேன். அப்போது சினிமா செழிப்பாக இருந்தது. தியேட்டரில் நீண்ட வரிசையில் ரசிகர்கள் நிற்பார்கள். இப்போது செல்போனில் படம் பார்க்கிறார்கள். காலம் மாறிவிட்டது’ என அவர் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: ஆசையாக வாய்ப்பு கேட்ட ரஜினி.. கைய விரிச்ச பாரதிராஜா.. கடைசியில நடந்தது இதுதான்!…