Cinema News
தோல்வியில் முடிந்த காதல் திருமணம்!.. பவதாரிணி வாழ்வில் நடந்த சோகம்..
bhavadharini: நேற்று மாலை எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்த செய்திதான் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மரணம். கடந்த 25 வருடங்களுக்கும் மேல் இசையுலகில் இருந்தவர். சிறு வயது முதலே இசையை கற்றுக்கொண்டவர். இளையராஜா இசையமைத்த ராசய்யா படத்தில் இடம் பெற்ற ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் மூலம் சினிமாவில் பாட துவங்கினார்.
அதன்பின் பல பாடல்களையும் அவர் பாடியி்ருக்கிறார். சொந்தமாக இசையமைத்து பாடி ஆல்பங்களையும் பவதாரிணி வெளியிட்டிருக்கிறார். பாரதி படத்தில் பவதாரிணி பாடிய ‘மயில் போன பொண்ணு ஒன்னு’ பாடலுக்கு சிறந்த பாடகிக்காகன தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.
இதையும் படிங்க: மதுபோதையில் வந்த இசைக்கலைஞர்!.. இளையராஜாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் சேர்ந்தது இப்படித்தான்!..
காதலுக்கு மரியாதை படத்தில் ‘என்னை தாலாட்ட வருவாளா’ பாடலையும் பாடியது இவர்தான். பவதாரிணி பாடிய பாடல்கள் குறைவுதான் என்றாலும் எல்லாமே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவை. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி கடந்த சில வருடங்களாக பல சிகிச்சைளையும் பெற்று வந்தார்.
கடந்த சில மாதங்களாக அந்த நோய் தீவிரமானது. எனவே, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற அவரை அனுப்பி வைத்தார் இளையராஜா. ஆனால், சிகிச்சை பலனின்றி பவதாரிணி நேற்று மாலை 5.20 மணிக்கு இலங்கையிலேயே மரணமடைந்தார். அவரி்ன் உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: 6 மாசமா அவஸ்த்தைப் படுறான்.. ஒண்ணும் வர மாட்டேங்குது.. இசையமைப்பாளர்களை கலாய்த்த இளையராஜா!
பவதாரிணியின் குடும்ப வாழ்க்கை பலருக்கும் தெரியாது. பிலிமாலயா என்கிற வார இதழை நடத்தி வந்தவர் எஸ்.என். ராமச்சந்திரன். அவரின் மகன் சபரி ராஜ் என்பவருக்கும் பவதாரிணிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இளையராஜாவும் அவர்களின் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்ட இருவருக்கும் திருமணம் நடந்தது. இதில், திரைப்பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. குடும்ப விழாவாக மட்டுமே அந்த திருமணம் நடந்தது.
ஆனால், பவதாரிணியின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார். அவருக்கு குழந்தையும் இல்லை. அதன்பின் அப்பாவின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். ஆனால், கூகுளில் தேடினாலும் பவதாரிணியின் திருமணம் பற்றி செய்தியோ, புகைப்படமோ இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் 80களுக்கு அழைத்துச் செல்லும் இளையராஜா…… இது எந்தப் படத்தில் தெரியுமா?