Cinema News
வயசான மாதிரி இருக்கும்! விஜயகாந்த் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த நடிகை யார் தெரியுமா?
Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் மனிதராகவே வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்து மக்கள் மனதை வென்ற ஒரு அற்புதமான நடிகர். எம்ஜிஆரின் கொள்கைகளை அப்படியே பின்பற்றி ஒட்டுமொத்த தமிழக நெஞ்சங்களில் குடியேறினார் கேப்டன் விஜயகாந்த்.
அரசியலிலும் ஒரு கட்டத்தில் தன் ஆளுமையை காட்டிய விஜயகாந்த் இடையில் அவருடைய உடல்நிலை காரணமாக மேற்கொண்டு அரசியலில் அவரால் சாதிக்க முடியவில்லை. ஆனாலும் தமிழகத்தில் இருந்த இருபெரும் கட்சிகளுக்கு டஃப் கொடுத்தார் . எந்தவொரு சுயநலமும் இல்லாமல் பொது மக்களுக்காகவே உழைத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
இதையும் படிங்க: ஒரு கையில் சரக்கு!.. ஒரு கையில் சைடிஷ்!.. மெயின் டிஷ்ஷாக மாறி நின்ற மிருணாள் தாகூர்!..
அவரின் மறைவு இன்று பல பேரை பாதித்திருக்கிறது. அவர் இறப்பிற்கு பின்னரும் அவருடைய நினைவிடத்தில் வைத்து அவர் சமாதியை பார்க்க வரும் அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த ஏழைஜாதி படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.
ஏழைஜாதி படத்தை லியாகத் அலிதான் இயக்கினாராம். விஜயகாந்தின் பெரும்பாலான படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் லியாகத் அலிகான். இந்தப் படத்திற்கு அவர்தான் இயக்குனர். இந்தப் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக ஜெயப்பிரதா நடித்திருப்பார்.
இதையும் படிங்க: பொண்ணு படம்னு ரஜினி நடிக்க மாட்டார்!.. அதுக்கு வேற காரணம் இருக்கு.. செந்தில் சொன்ன விஷயம்!..
ஆனால் முதலில் இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் என லியாகத் அலி கூறியிருந்தாராம். பானுப்ரியா மற்றும் கஸ்தூரியை நடிக்க வைக்கலாம் என நினைக்க படத்தின் தயாரிப்பாளரோ ஜெயப்பிரதாவை நடிக்க வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் லியாகத் அலி ஜெயப்பிரதா விஜயகாந்துக்கு செட் ஆக மாட்டார் என்றும் பார்க்க வயசு அதிகமாகவும் இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் தயாரிப்பாளர் இரண்டு நாயகிகளின் கதாபாத்திரத்தை ஒன்றாக்கி விடுங்கள். அதில் ஜெயப்பிரதாவையே நடிக்க வையுங்கள் என்று சொல்ல வேறு வழியில்லாமல் ஜெயப்பிரதாவை லியாகத் அலி ஓகே பண்ணியிருக்கிறார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் செய்ததை விட பெருசு இல்லயே! இளையராஜாவுக்காக இறங்கி வந்த வடிவேலு.. இதுதான் காரணமா