எனக்கும் அஜித்துக்கும் சண்டை! நேரா வீட்டுக்கே வந்துட்டாரு.. சரத்குமார் வீட்டில் நடந்த அந்த சம்பவம்

Published on: January 30, 2024
sarath
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் மாஸ் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ், ரைஃபில் சுடுதல், ட்ரோன் பயிற்சியாளர் என பல திறமைகளை கொண்ட ஒரு அற்புதக் கலைஞர்தான் அஜித்.

நடிகர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர் என்ற பெயரையும் வாங்கிவிட்டார். அந்தளவுக்கு மற்ற நடிகர்களை போல் எளிதாக அனைவரையும் வந்து பார்க்கவோ, விழாக்களில் கலந்து கொள்ளவோ என பொது இடங்களில் அஜித்தை காண்பது என்பது மிக கடினம்.

இதையும் படிங்க: ஐயோ கழண்டு விழுந்துடுமோன்னு பயமா இருக்கு!.. பிட்டு பட நடிகையை ஓவர்டேக் செய்யும் ராஷி கண்ணா!..

அப்படியே குடும்பத்துடன் பொழுதுபோக்கை கழிக்க வேண்டுமென்றால் வெளி நாட்டிற்கு அழைத்து சென்றுவிடுகிறார். தன்னையும் தன் குடும்பத்தையும் ஒரு பொக்கிஷமாகவே கருதுகிறார் அஜித். இந்த நிலையில் அஜித்தை பற்றி சரத்குமார் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறினார்.

அதாவது அஜித் மிகச்சிறந்த மனிதர் என்று கூறிய சரத்குமார் அவருடைய ஆரம்பகாலங்களில் ராதிகா அஜித்திற்கு மிகப்பெரிய உதவியெல்லாம் செய்திருக்கிறார் என்பதையும் கூறினார். அதுமட்டுமில்லாமல் அஜித்துக்கு திடீரென மனதில் நெருடல் ஏற்பட்டால் முதல் ஆளாக சரத்குமாருக்குத்தான் போன் செய்து ‘ஃப்ரீயாக இருக்கீங்களா? வந்து பார்க்கனும்’ என்று சொல்லி சரத்குமாரை பார்க்க வருவாராம். அந்த மாதிரி இரு முறை சரத்குமாரை பார்க்க அவர் வீட்டிற்கே சென்றாராம் அஜித்.

இதையும் படிங்க: ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்!.. தவித்துப்போன நடிகர் திலகம்!.. கடைசியில் நடந்தது இதுதான்!..

அவர் மனதில் என்ன படுகிறதோ அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் உடனே கேட்டு அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வார் அஜித். அது மிகப்பெரிய குணம் என்று சரத்குமார் கூறினார். ஒரு சமயம் அஜித் படத்திற்கு எதிராக சரத்குமார் கட்சியில் இருந்த ஒருவர் போராட்டம் நடத்தினாராம். இதை தெறிந்த அஜித் சரத்குமாருக்கு போன் செய்து ‘உங்க ஆளுதானு சொல்றாங்க. அதில் நீங்களும் சம்பந்தப்பட்டிருக்கீங்கனும் சொல்றாங்க. அது உண்மையா?’ என கேட்டாராம்.

அதற்கு சரத்குமார் ‘இல்ல அஜித். அவர் என் கட்சியில் இருந்து எப்பவோ வெளியேறி விட்டார். அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ என்று சொல்லி தெளிவுபடுத்தினாராம் சரத்.

இதையும் படிங்க: தல நீ வேற லெவல் போ!.. அசைர்பைசானில் அஜித்!.. வெளியான அடுத்த போட்டோ!..