Connect with us
vijayakanth

Cinema News

கலைஞர் கைவிட்டார்.. நண்பன் விஜயகாந்துதான் காப்பாத்தினான்!.. பகீர் தகவலை சொல்லும் தியாகு..

Vijayakanth: விஜயகாந்த் என்றாலே தனக்கு தெரிந்து ஒருவருக்கு பிரச்சனை எனில் உடனே போய் அங்கு நிற்பார். அதுதான் அவரின் குணம். அதுவும் நண்பர்களுக்கு ஒரு சிக்கல் எனில் முதல் ஆளாக களத்தில் இறங்கி அந்த சிக்கலை தீர்த்துவிட்டுத்தான் வீட்டுக்கே போவார். இப்படி அவரின் நண்பர்கள் பலருக்கும் உதவி இருக்கிறார்.

விஜயகாந்தின் நெருங்கி நண்பர்தான் நடிகர் தியாகு. இருவரும் ‘வாடா போடா’ என பேசிக்கொள்ளும் அளவுக்கு நண்பர்கள். விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டபோதும் சரி, அவர் மரணமடைந்தபோதும் சரி.. அவருக்காக உருகியவர்தான் தியாகு. நடக்க முடியாத சூழ்நிலையிலும் விஜயகாந்த் இறந்த செய்திகேட்டு சிலபேர் கைத்தாங்கலாக பிடிக்க விஜயகாந்தின் வீட்டுக்கு போய் கதறி அழுதார்.

இதையும் படிங்க: விஜயகாந்தை குடிகாரன்னு சொன்னா எவனா இருந்தாலும் அடிப்பேன்!.. சீறும் தியாகு!..

அதன்பின் விஜயகாந்த் உடல் தீவுதிடலில் இருந்தபோது அங்கு சென்று அவரின் உடலின் அருகிலேயே பல மணி நேரம் அமர்ந்திருந்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய தியாகு ‘விஜயகாந்த் எனக்கு நெருங்கிய நண்பன். நான் திமுகவில் 25 வருடங்கள் இருந்தேன். தேர்தல் பிரச்சாரங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் அந்த கட்சிக்காக பேசியிருக்கிறேன்.

ஒருமுறை ஜெயலலிதா ஆட்சியின்போது ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு வீட்டுக்கு வந்தபோது அங்கு போலீஸ் அதிகாரிகள் நிறைய பேர் இருந்தார்கள். என்னை கைது செய்ய வந்திருப்பதாக சொன்னார்கள். அதற்கு பின்னணியில் அப்போது அதிமுகவில் இருந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் இருந்தார்’.

இதையும் படிங்க: ஷூட்டிங் முடிஞ்சி மிட் நைட் வந்தாலும் கேப்டன் அதை செய்யாம தூங்க மாட்டார்!.. பிரேமலதா சொன்ன சீக்ரெட்!..

கலைஞர், ஸ்டாலின் என எல்லோருக்கும் போன் செய்தேன். யாரும் என்னிடம் பேசவில்லை. உடனே விஜயகாந்துக்கு போன் செய்தேன். அவன் உடனே சசிகலாவிடம் பேசினான். அதற்குள் நான் மூப்பனார் ஐயாவிடம் பேசிவிட்டேன். அவர் ஆளுநருக்கு போன் செய்து என் கைதை தடுக்க சொன்னார்.

விஜயகாந்த் சசிகலாவிடம் பேசியதும் போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அப்படிப்பட்டவன்தான் என் நண்பன் விஜி. ஜெயலலிதா ஆட்சி நடந்துகொண்டிருக்கும்போது கலைஞருக்கு பொன்விழா எடுத்து 10 லட்சம் மதிப்புள்ள தங்க பேனாவை பரிசாக கொடுத்தான். ஆனால், அவனின் கல்யாண மண்டபத்தை இடித்தார்கள்’ என கோபமாக பேசினார் தியாகு.

இதையும் படிங்க: விஜயகாந்த் அதை யாரிடமும் சொன்னதே இல்லை!.. அவர் போல ஒரு மனிதர்!.. உருகும் பிரபலம்….

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top