Banumathi: தமிழ் சினிமாவில் 50,60களிலேயே நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளோடு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்தவர் நடிகை பானுமதி. அவரின் அப்பா ராமகிருஷ்ணா ஆந்திராவில் நாடக நடிகராக இருந்தவர். அப்பாவின் நடிப்பை பார்த்து வளர்ந்தவர் பானுமதி.
50,60களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் இவர். மிகவும் திறமைசாலி என்பதால் யாருக்கும் பயப்பட மாட்டார். எம்.ஜி.ஆரையே ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என பெயர் சொல்லித்தான் அழைப்பார். படப்பிடிப்பில் இவருக்கு ஏதேனும் பிடிக்கவில்லை எனில் உடனே அந்த படத்திலிருந்து விலகிவிடுவார்.
இதையும் படிங்க: என்கிட்ட எல்லாரும் பயப்படுவாங்க!. ஆனா சிவாஜி வேறலெவல்!. அப்போதே சொன்ன பானுமதி..
எம்.ஜி.ஆர் முதன் முதலில் இயக்கி, தயாரித்து நடித்த நாடோடி மன்னன் படத்தில் பானுமதி நடித்தார். ஆனால், சில காட்சிகளில் அவர் நடித்தது எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. எனவே, ரீடேக் எடுக்கவே அதில் கோபப்பட்ட பானுமதி அந்த படத்திலிருந்து விலகிவிட்டார். அதன்பின் சரோஜாதேவியை வைத்து அந்த படத்தை முடித்தார். எம்.ஜி.ஆர்.
அதனால் திரையுலகில் பானுமதியிடம் மட்டும் நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கவனமாக நடந்துகொள்வார்கள். சாவித்ரிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்த திரைப்படம் மிஸ்ஸியம்மா. ஜெமினி கணேசன் ஹீரோவாக நடித்த இந்த படத்தை முதலில் நடிக்கவிருந்தது பானுமதிதான்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை பார்த்ததும் கணித்த பானுமதி.. அவர் சொன்ன ஜோசியமும் அப்படியே பலிச்சிடுச்சே!..
இந்த படத்தை நாகி ரெட்டி மற்றும் சக்கரபாணி ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இதனால், படப்பிடிப்பில் எப்போதும் சக்கரபாணி இருப்பார். எடுக்கும் காட்சிகளிலும் தலையிடுவார். ஒருமுறை ஒரு காட்சியில் பானுமதி வசனம் பேசும்போது சக்கரபாணி ஒன்று சொல்ல அதில் கோபமடைந்த பானுமதி அப்படத்திலிருந்து விலகிவிட்டார்.

அதன்பின் அவர் மீது இருந்த கோபத்தில் தெலுங்கில் சக்கரபாணி என்கிற படத்தையே பானுமதி இயக்கினார். இந்த படத்தில் கதாநாயகனுக்கு சக்கரபாணி என பெயர் வைத்து அந்த கதாபாத்திரத்தை கஞ்சனாக காட்டி இருந்தார். இதுதான் பானுமதி இசையமைத்த முதல் படமும் கூட.
கோபத்தில் அவர் அப்படி படம் எடுத்தாலும் மிஸ்ஸியம்மா படத்தை பார்த்துவிட்டு ‘இந்த படத்தில் நான் நடிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். அதேநேரம், நான் விலகியதால் சாவித்ரி எனும் திறமையான நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார். அது எனக்கு சந்தோஷம்தான்’ என்று சொன்னார் பானுமதி.
இதையும் படிங்க: நடிப்புல ஸ்கோர் பண்ண இப்படியெல்லாம் செய்வாரா பானுமதி!.. ரொம்ப ஓவரே இருக்கே!..





