Connect with us

Cinema News

ஏ.ஆர். ரஹ்மான் – வைரமுத்து சண்டைக்கு இதுதான் காரணமா?.. வாலி போல இவர் வரவே மாட்டாரா?.

சின்மயி விவகாரத்துக்குப் பிறகு தான் ஏ.ஆர். ரஹ்மான் தனது படங்களில் இருந்து வைரமுத்துவை நீக்கி விட்டாரா என்கிற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் வைரமுத்து பிரிவுக்கு அதுதான் காரணமா? என்கிற கேள்விக்கு பிரபல பத்திரிகையாளர் ராஜகம்பீரன் பதில் அளித்துள்ளார்.

புதிய பாடலாசிரியர்களை தேடி ஏ.ஆர். ரஹ்மான் செல்ல ஆரம்பித்து விட்டார். அதனால், தான் வைரமுத்துவை விட்டு விட்டார் எனக் கூறியுள்ளார். சின்மயி மற்றும் வைரமுத்துவின் பிரச்சனை அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த விஷயம் என்பதால் அதில், கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் ஏ.ஆர். ரஹ்மான் வைரமுத்துவை பிரிய கண்டிப்பாக அது காரணமாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எதே கீழ இருந்து புல்லட் வருமா?.. சலார் பில்டப்புக்கே சவால் விடுதே சைந்தவ்!.. சிரிப்பை அடக்க முடியல

பாடலாசிரியர் வாலி இளம் கவிஞர்களை எல்லாம் பாராட்டும் மனம் கொண்டவர். நா. முத்துகுமார் எழுதிய ”ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்” வரிகளை கேட்டு விட்டு   எமிஜிஆர் மட்டும் இப்போ இருந்திருந்தால்  உன் விரலுக்கு தங்க மோதிரம் போட்டு இருப்பார். அருமையா இருக்குய்யா என பாராட்டினார்.

ஆனால், வைரமுத்துவுக்கு அப்படி இளம் பாடலாசிரியரை பாராட்டும் எண்ணம் எல்லாம் கிடையாது. இப்போதும் இளையவர்களிடம் சரிக்கு சமமாக போட்டி போடக் கூடியவர். அந்த பக்குவம் அவருக்கு வரவில்லை. இளையராஜா போலவே தலைகனம் கொஞ்சம் அதிகம் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: வைரமுத்து தன்னுடைய பாடல்களில் இதை இதுவரை செய்ததே இல்லை!… கவனிச்சி இருக்கீங்களா…

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top