இதைவிட ஒரு மகளுக்கு பெரிய கிரெடிட் இருக்குமா என்ன? ஐஸ்வர்யாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு

Published on: February 9, 2024
rajini_pro
---Advertisement---

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கே பிறந்தவர் போல் என்றென்றும் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறார் ரஜினி. அதனாலேயே அந்த பட்டத்தை வேறு யாரும் பறிக்க மக்களும் அனுமதிப்பதில்லை,

70களில் ஒரு சாதாரண நடிகராக வந்த ரஜினி படிப்படியாக முன்னேறி இன்று ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருக்கிறார் என்றால் அதற்கு பின்னாடி அவர் கடந்து வந்த அந்த கரடுமுரடான பாதைகளும் கஷ்டமான சூழ்நிலைகளும்தான் காரணம். அதையெல்லாம் பொறுமையாகவும் மகிழ்ச்சியாகவும் கடந்தே ரஜினி இந்தளவு உயரத்தை அடைந்திருக்கிறார்.

இதையும் படிங்க: லால் சலாம் படத்துக்கு புரமோஷன் பண்ணும் தனுஷ்!.. என்ன இருந்தாலும் பாசம் போகாது போல!…

இந்த நிலையில் இன்று தன் மகளின் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் உலகெங்கிலும் அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. தன் மகளின் இயக்கத்தில் ரஜினி நடித்திருப்பது அவருக்கே ஒரு பெருமையான தருணம் தான்.

எத்தனையோ பல முன்னனி இயக்குனர்களுடன் பணிபுரிந்த ரஜினி இந்த படத்தில் மகளுடன் இணைந்திருப்பது ரஜினிக்கு ஒரு ஸ்பெஷலான விஷயம்தான். இந்த நிலையில் லால் சலாம் படம் ரிலீஸ் ஆவதை ஒட்டி தன் மகளுக்கு ரஜினி மிகவும் உருக்கமான முறையில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: மகன் பிறந்ததும் இப்படி ஒரு மனக் குமுறலா? பார்க்கக் கூட ஆசைப்படாத நாகேஷ்.. ஏன்னு தெரியுமா?

அதை பார்க்கும் போது தன் மகள் மீது எந்தளவு ரஜினி நம்பிக்கையும் பாசமும் வைத்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது. அந்த பதிவில் ‘என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

rajini
rajini

எல்லா மகளும் அவரவர் அப்பாவுக்கு ஒரு தாய் போல்தான். அதே மாதிரியான ஒரு மன நிலையில்தான் ரஜினியும் தன் மகளை தாய் என குறிப்பிட்டு தன் வாழ்த்துக்களை குறிப்பிட்டிருக்கிறார். இது ஐஸ்வர்யாவுக்கு கிடைத்து ஒரு விலையுயர்ந்த பரிசாகவே இருக்கும் என ரசிகர்கள் தங்களது கமெண்ட்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஒரே பாத் டப்பில் அப்படியொரு குளியல்!.. விஜய் பட ஹீரோயின் ஜமாய்க்கிறாரே!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.