எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவியாளராக இருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். தீனா படம் மூலம் இயக்குனராக மாறினார். அதன்பின் இரண்டாவது படமே விஜயகாந்தை வைத்து ரமணா எடுத்தார். இந்த படம்தான் முருகதாசை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஷங்கர் போல படமெடுக்கிறார் என ரசிகர்களும், திரையுலகிலும் பேச துவங்கினார்கள்.
மூன்றாவதாக சூர்யாவை வைத்து கஜினி எடுத்தார். இந்த படமும் சூப்பர் ஹிட். சூர்யாவுக்குள் இருந்த ஒரு நடிகரை அழகாக வெளிக்கொண்டு வந்தார் முருகதாஸ். அதோடு, சூர்யா ஒரு ஆக்ஷன் ஹீரோ என்பதையும் இப்படம் மூலம் காட்டியிருந்தார். அதன்பின் பாலிவுட் பக்கம் போய் அதே கஜினி படத்தை அமீர்கானை வைத்து எடுத்தார். அதுவும் சூப்பர் ஹிட்.
இதையும் படிங்க: ரஜினிகாந்தின் இன்டஸ்ட்ரி ஹிட் படங்கள் என்னென்ன?.. வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயை வைத்து முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் விஜயின் சினிமா கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. அதேபோல், கத்தி திரைப்படமும் பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் ரஜினியை வைத்து முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

தர்பார் படம் வெளியாகி 4 வருடங்கள் ஆகியும் முருகதாஸ் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில்தான், சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படத்தை முருகதாஸ் இயக்குவது முடிவானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இதையும் படிங்க: 500 ரூபாய் சம்பளத்துக்கு வேறு நடிகருக்கு குரல் கொடுத்த சிவாஜி!.. அதுதான் முதலும் கடைசியும்!..
ஆனால், சிவகார்த்திகேயன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்து வருவதால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை. இந்நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை முடித்தபின் பாலிவுட் நடிகர் சல்மான்கானை இயக்கவுள்ளாராம் முருகதாஸ்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 2025 ரம்ஜான் பண்டிகையின் போது வெளியாகும் என சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன், சல்மான்கான் என அதிரடி காட்டுவதால் முருகதாஸ் விட்ட இடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
