வெளிநாடுகளுக்கு சென்றால் ஆளே மாறிவிடும் ரஜினிகாந்த்.. பொது இடத்துக்கு செல்ல இப்படி ஒரு ட்ரிக்கா?

Published on: February 15, 2024
---Advertisement---

Rajinikanth: பொதுவாக நம் நாட்டில் இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு இருக்கும் பெரிய ஆசையே சாதாரண மக்கள் மாதிரி நாமளும் வலம் வர வேண்டும் என்பது தான். அப்படி அமெரிக்க சென்ற போது ரஜினிக்கு வந்த ஒரு திடீர் ஆசையில் ஒரு விஷயத்தினை செய்தாராம்.

சாதாரண ஒரு கண்டெக்டராக இருந்து நடிகராக ஆசைப்பட்டு திரைப்பட கல்லூரியில் இணைந்து படித்தவர் ரஜினிகாந்த். அங்கிருந்தும் கூட தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு இன்று கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அடையாளத்துடன் வலம் வருகிறார். சினிமா பின்னணியே இல்லாதவர்.

இதையும் படிங்க: உங்களை சேர்த்தது தப்புதான்..கடிந்துக்கொண்ட பிரபல நடிகர்… இனி செய்ய மாட்டேன்.. வாக்கு தந்த ரஜினிகாந்த்

நடுத்திர குடும்பத்தில் இருந்து வந்த ரஜினிக்கு அதன்பின்னர் தன் சுதந்திரமே பறிப்போனதாகவே கருதுகிறார். இதனால் தான் அவர் ஓய்வெடுக்க விரும்பும் சில மாதங்களை வெளிநாட்டுக்கு பறந்துவிடுவாராம். ஒரு படம் முடிந்து அடுத்த படம் துவங்குவதற்கான ஓய்வை அப்படி பயன்படுத்திக் கொள்கிறார்.

அது அங்கு இருக்கும் உயர்தர விஷயங்களுக்காக இல்லை. சாதாரண வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு தானாம். வெளிநாடுகளில் தன்னை அடையாளம் காண முடியாத இடங்களில் பெரும்பாலும் நடைப்பயணமாக செல்வாராம். இல்லை அங்கிருக்கும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவாராம். ஸ்டாரை மறந்து சாதாரண மனிதனாகிவிடுவாராம்.

இதையும் படிங்க: அஜித் காதலியை தனதாக்க ட்ரை செய்த சரத்குமார்… வெறுப்பேற்ற எப்படி இறங்கினார் தெரியுமா?

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.