இன்னும் நீ போகலையா!.. 100% லியோ 2 பாசிபிள்!.. லோகேஷ் சொன்ன வார்த்தை.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Published on: February 17, 2024
---Advertisement---

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தளபதி விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.

ஆனால், விமர்சன ரீதியாக மாஸ்டர் படத்தை விட மோசமாக உள்ளதாக பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். எல்லோரையும் விட நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் லியோ படத்தின் இரண்டாம் பாதியை கழுவி ஊற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சென்னை ரசிகர்களை சந்தித்த விஜய்!.. அட எங்கேன்னு பாருங்க!.. கோட் சூட்டிங் ஸ்பாட் இனி அனல் பறக்குமே!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி மற்றும் விக்ரம் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தன. விஜயை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் இரண்டாம் பாதியில் சில சுத்தப் பல்கலை சந்தித்தன. அதே போல லியோ திரைப்படம் போலியான பிளாஷ்பேக் என சொல்லி லோகேஷ் கனகராஜ் மொக்கை போட்டுவிட்டார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற காமிக்கா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது லியோ 2 படம் பற்றி கேட்கப்பட்டது. நடிகர் விஜய் தற்போது சினிமாவைத் தாண்டி வேறு ஒரு தளத்தில் பெரிய லட்சியத்துடன் செல்கிறார். அவர் விரும்பி படம் பண்ண அழைத்தால், கண்டிப்பாக லியோ 2 படமும் 100% சாத்தியம் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்!.. எம்.ஜி.ஆர் சொன்ன காரணத்தை பாருங்க!…

அதைக் கேட்ட நன்றி சொல்லுங்கள் லியோ முதல் பாகமே போதும் மீண்டும் விஜய் அண்ணாவை வைத்து லோகேஷ் கனகராஜ் எக்ஸ்பிரிமெண்ட் செய்ய வேண்டாம் என கமெண்ட் போட்டு வருகின்றனர். இது சமயம் லியோ படத்தில் தளபதி விஜய்யை லோகேஷ் கனகராஜ் தாறுமாறாக காட்டியுள்ளார். லியோ 2 வந்தால் ட்ரோல்களுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்பார் எனக் கூறுகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.