Cinema News
அந்த விஷயத்துல அஜித்துக்கு முன்னோடி கவுண்டமணிதான்!.. அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!…
நடிகர் அஜித் இப்போது போல் முன்பு இல்லை. அப்போது எல்லோரிடமும் சகஜமாக பேசுவார். சினிமா பத்திரிக்கையாளர்களிடம் நன்றாக பழகுவார். பத்திரிக்கைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுப்பார். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். ஆனால், சில விஷயங்கள் அவரை மொத்தமாக மாற்றிவிட்டது.
எனவே, இனிமேல் என் ரசிகர்கள் என்னை திரையில் மட்டுமே பார்க்க வேண்டும் என முடிவெடுத்தார். எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. அவர் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கே வரமாட்டார். யாருக்கும் பேட்டி கொடுக்கமாட்டார். செய்தியார்களிடம் பேச மாட்டார்.
இதையும் படிங்க: இந்த மாதிரி ஒரு படத்துல நடிக்கணும்!.. கவுண்டமணியின் தீராத ஆசை. அட நடக்காமலேயே போயிடுச்சே!..
இப்போது அஜித் இப்படி இருந்தாலும் அவருக்கு முன்னோடி நம்ம கவுண்டமணிதான். அஜித்தாவது சில விஷயங்களால் அப்படி மாறினார். ஆனால், கவுண்டமணி துவக்கத்தில் இருந்தே அப்படித்தான். யாருக்கும் பேட்டி கொடுக்கமாட்டார். எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளமாட்டார். அவர் இதுவரை கலந்து கொண்ட சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
சினிமா தொழில் என்பது வெளிப்படையாக இருக்கக் கூடாது. மூடி மறைக்கும் வரைதான் அதன் மேல் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் இருக்கும் என்பதுதான் கவுண்டமணியின் நிலைப்பாடு. இதுவரை அவரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் வெளிவந்ததே இல்லை. அதில் மிகவும் கவனமாக இருப்பார். தன்னை சினிமாவில் மட்டுமே ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதையும் படிங்க: எழுதியா கொடுக்கிற? அடிக்கிறேன் பாரு கவுண்டரு – அர்ஜுனை காயப்படுத்திய கவுண்டமணி காமெடி!
மிகவும் முக்கியமான, தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்துகொள்வார். ஒருமுறை கவுண்டமணியிடம் ‘உங்கள் காட்பாதர் யார்?’ என கேட்டபோது ‘நான் என்ன மாபியா கேங்லயா இருக்கேன்’ என கேட்டார். 12 வயது முதல் நாடகங்களில் நடித்ததால் சபை கூச்சம் என்பது எனக்கு இல்லை. அதுதான் எப்படிப்பட்ட வேடத்தையும் நடிக்கும் நம்பிக்கையை எனக்கு கொடுத்தது.
எங்கள் குடும்பம் ஒரு விவசாய குடும்பம். எங்கள் குடும்பத்துகும் சினிமாவுக்கும் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம். ஆனால், எனக்கு மட்டும் நடிப்பின் மீது அவ்வளவு ஆர்வம். சினிமாவில் ஒரு நடிகனாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. மற்றபடி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் எனக்கு இருந்ததே இல்லை’ என ஒருமுறை சொன்னார்.
உங்கள் ரசிகர்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது என்ன? என ஒருமுறை கேட்டபோது ‘நல்லா சிரிங்க. நாலு பேரை சிரிக்க வையுங்க. சந்தோஷமா இருங்க.. அவ்வளவுதான் வாழ்க்கை’ என சொன்னார் கவுண்டமணி.
நகைச்சுவை அரசரிடமிருந்து நாம் வேறென்ன எதிர்பர்க்க முடியும்!..
இதையும் படிங்க: எழுதும்போது தப்பாச்சி.. அதுவே அவருக்கு பேர் ஆச்சி!.. கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்..