Cinema News
குணா பட குகையை இப்படித்தான் கண்டுபிடிச்சோம்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன சந்தானபாரதி…
சமீபத்தில் வெளியான மலையாள மொழி திரைப்படமான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் மூலம் எல்லோரும் கமல்ஹாசன் நடித்து 1991ம் வருடம் வெளியான குணா படம் பற்றி பேச துவங்கி இருக்கிறார்கள். குணா படம் எடுக்கப்பட்ட கொடைக்கானல் குகையை மையமாக வைத்தே மஞ்சும்மெல் பாய்ஸ் படம் உருவாகியிருக்கிறது.
வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. அதைவிட ஆச்சர்யம் என்னவெனில் தமிழகத்திலும் இந்த படம் 15 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. கடந்த 3 வாரங்களாக இந்த படம் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: குணா குகைக்குள் செல்ல மறுத்த இயக்குனர்! கமல் செய்தது இதுதான்!.. ஒரு பிளாஷ்பேக்!..
இந்த படத்தில் பல இடங்களிலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் வரும் அந்த பாடல் ரசிகர்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. குணா படம் அங்கு எடுக்கப்படுவதற்கு முன் அந்த இடத்தின் பெயர் ‘சாத்தான்களின் சமையலறை’ என்றே இருந்தது.
கமல் அங்கு சென்று குணா படம் எடுக்கப்பட்டபின் அந்த இடம் குணா குகையாக மாறிவிட்டது. அதோடு, ஒரு சுற்றுலாத்தளமாகவும் மாறிவிட்டது. அதுவும், மஞ்சும்மெல் பாய்ஸ் படம் வந்தபின் அந்த இடத்தை நேரில் சென்று பார்க்கும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகரித்துவிட்டது.
இதையும் படிங்க: ‘குணா’ பட ஹீரோயினுக்கு நடந்த டார்ச்சர்? இந்த நடிகையின் சகோதரியா அவங்க.. குகையை விட மர்மமா இருக்கே
இந்நிலையில், குணா படத்திற்கு அந்த இடத்தை எப்படி தேர்வு செய்தார்கள் என்பதை அப்படத்தின் இயக்குனர் சந்தானபாரதி தெரிவித்திருக்கிறார். முதலில் செட் போட்டு எடுத்துவிடலாம் என்றுதாம் நினைத்தோம். ஒருகட்டத்தில் கொடைக்கானல் சென்று குகை போல இருக்கும் ஒரு இடத்தை தேடி வந்தோம். அப்போது ஒரு டூரிட்ஸ் கெய்ட் எங்களிடம் வந்து ‘சார் எனக்கு சில இடங்கள் தெரியும். உங்களை அழைத்து செல்கிறேன்’ என சொன்னார்.
அன்று மதியம் நானும், கமலும் அவருடன் சென்றோம். ஒரு இடத்தை காட்டினார். அந்த இடத்தில் இறந்துபோன ஒருவரின் சமாதி அங்கே இருந்தது. பார்த்ததும் ஜெர்க் ஆனோம். ‘இது ஆபத்தான இடம். கவனமா வாங்க’ என சொல்லி பீதியை கிளப்பினார். ஒரு சின்ன குகையை காட்டினார். இரண்டாவதாக ஒரு பெரிய குகையை காட்டினார். அதிலிருந்து இறங்கி உள்ளோ போய் பாருங்கள் என்றார். செடிகளையும், ஒருவரின் கையை ஒருவர் பிடித்துக்கொண்டும் இறங்கி சென்றோம். அங்கு பெரிய குகை இருந்தது. அதுதான், படத்தின் இறுதிக்காட்சியில் நீங்கள் பார்க்கும் குகை’ என சந்தானபாரதி கூறியிருந்தார்.
இதையும் படிங்க: குணா படம் உருவானபோது நடந்த அடிதடி!.. கமல் படங்களில் ஜனகராஜ் நடிக்காமல் போனதன் பின்னணி!..