Cinema History
கமல் எட்டி உதைத்ததில் காற்றில் பறந்த சேர்… பதறியடித்த படக்குழு!.. நடந்தது இதுதான்!..
சினிமாவில் கமல் எப்படி நடிக்கிறார் என்பது பற்றித்தான் நமக்குத் தெரியும். ஆனால் நிஜத்தில் அவரது குணாதிசயம் என்ன? இவ்வளவு கோபக்காரரா என நாமே வியந்து விடுவோம். இதுபற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஓபன் டாக் கொடுத்துள்ளார். அப்படி என்ன நடந்தது? கமலுக்கு ஏன் இவ்ளோ கோபம் வந்ததுன்னு பார்ப்போமா..
கர்வம் தான் என்னோட கவசம்னு கமல் நாகேஷின் பாராட்டு விழாவில் சொன்னார் கமல். சினிமாவில் கர்வமாக இல்லேன்னா ஏமாற்றிடுவாங்கன்னும் சொல்லி இருக்கிறார்.
கமல், பிரபு நடிப்பில் பட்டையைக் கிளப்பிய காமெடி படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். இந்தப் படத்தில் ஹாஸ்பிடல் காட்சி ஒன்றை பச்சையப்பா காலேஜ் எதிரில் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போ அவரை இன்டர்வியு எடுக்கப் போனேன். கேள்வியை எல்லாம் முன்கூட்டியே கொடுத்தாச்சு. ஒரு பிளாஸ்டிக் சேரில் போய் உட்காரப் போனேன். நில்லுங்கன்னாரு. அந்தச் சேரைக் காலால் தூக்கி ரெண்டு தட்டு தட்டுனாரு. அப்படியே காலால் எட்டி உதைக்க அது பறந்து போய் விழுந்தது.
எனக்கு என்னடா இப்படி செஞ்சிட்டாரேன்னு பயமா இருந்தது. புரொடக்ஷன்ல உள்ள அத்தனை பேரும் ஓடி வாராங்க. வேற ஒரு பிளாஸ்டிக் சேரைக் கொண்டு வாங்கன்னாரு. சில சேர் எல்லாம் மழையில ஊறிப்போயி ஒரு மாதிரி இருக்கும். அது மாதிரி ஒரு சேரை நமக்குப் போட்டது தப்பு. நீங்க எப்படி ஒருத்தர் என்னைப் பார்க்க வர்றாருங்கற போது…? யாரு புரொக்டஷன் மேனேஜர்? ’ என அவர் கோபமாக கேட எல்லாரும் பதறிட்டாங்க..
இதையும் படிங்க… உடனே எனக்கொரு யானை வேணும்!.. கொண்டு வாங்க!.. தயாரிப்பாளரை கதிகலங்க வைத்த சிவாஜி!..
அடுத்த 10வது நிமிஷம் புது சேரே வந்தது. இந்த ஆளுமை, இந்த குணம் இல்லை என்றால் அந்த சினிமாவில் ஏமாற்றுவார்கள்னு ஒரு நேர்காணலிலே கமல் சொன்னாராம். கமலின் அன்பேசிவம், உத்தம வில்லன், ஆளவந்தான் படங்கள் எல்லாம் பெரும் எதிர்பார்ப்புகளைத் தந்து கடைசியில் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லாமல் போய்விட்டன.