ஒருவழியா அடுத்து மாலினிக்கு முடிவு கட்ற நேரம் வந்துடுச்சு போல!… தப்பிச்சோம் டா!…

Published on: March 21, 2024
---Advertisement---

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் சமையலறையில் அமிர்தா மற்றும் பாக்கியா அங்கு இருக்கின்றனர். அப்போ வரும் ராதிகா, பாக்கியாவை அழைக்கிறார். அவர் என்ன விஷயம் எனக் கேட்க அன்னைக்கு நீங்க இருந்த இடத்துல தான் ஜெனி இப்போ இருக்கா? 

ஆனா நீங்க செழியனுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க. ஜெனிக்கு தான் ஆதரவா இருக்கணும் என்கிறார். அதை கேட்ட பாக்கியா, செழியன் மற்றும் ஜெனிக்கு நிறைய நல்ல நினைவுகள் இருக்கு. ஆனால் எனக்கு அப்படி கிடையாது. அதிலும் செழியன் பண்ணது தப்பு தான். எனக்கு நடந்தது துரோகம் என்கிறார்.

இதையும் படிங்க:காட்டுக்குள் அஜித் என்னலாம் பண்றாரு பாருங்க!.. விடாமல் துரத்தும் விடாமுயற்சி நடிகர்!.. செம பிக்ஸ்!

உங்க கேள்விக்கு பதில் கிடைச்சு இருக்கும்னு நம்புறேன் எனக் கூறிவிட்டு செல்கிறார். பின்னர் எழில் மற்றும் அமிர்தா பேசிக்கொண்டு இருக்கின்றனர். செழியன், ஜெனி விஷயத்தில் எதுவும் செய்யணும் எனக் கூறிக்கொண்டு இருக்கின்றார். பின்னர் காலை ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்து இருக்கிறார். அப்போது, கல்யாண புரோக்கர் வீட்டுக்கு வருகிறார்.

செழியனுக்கு பொண்ணு பார்க்க வேண்டும் எனக் கூற செழியன் மற்றும் பாக்கியாவுக்கு அதிர்ச்சி ஆகிவிடுகிறது. ஒருமுறை உன் பேச்சை கேட்டோம். இந்த முறை எங்க பேச்சை கேளு எனவும் ஈஸ்வரி வலுகட்டாயம் செய்கிறார். இதனால் கடுப்பாகும் செழியன் அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார்.

இதையும் படிங்க: காட்டுறதை காட்டுறேன்!.. பார்க்குறதை பார்த்துக்கோ!.. வாஜி வாஜி சிவாஜி பாட்டுல போட்ட டிரெஸ்ஸா இது?..

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.