Lokesh kanagaraj: சினிமாவைப் பொறுத்த வரைக்கும் எத்தனை படங்களை ஒரு இயக்குனர் எடுத்தாலும் அந்த இயக்குனர்கள் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை பெறுவதற்கு மிகவும் போராடிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் தன் கரியரில் 5 படங்களை மட்டுமே எடுத்து ஒரு உச்ச நிலையை அடைந்த இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்கள் எல்லாம் அவரை ஒரு மாஸ் இயக்குனராக தமிழ் சினிமாவில் பிரதிபலித்திருக்கிறது. அந்த வகையில் அடுத்ததாக ரஜினியை வைத்து ரஜினி 171 படத்தை எடுக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கு மத்தியில் அவர் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? நடிப்பாரா என்றெல்லாம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: கமலின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கும் அசோக்செல்வன்! அதுக்குத்தான் இந்த கெட்டப்பா?
அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக நேற்று வெளியானது ‘இனிமேல்’ ஆல்பம் சாங். ஸ்ருதிஹாசன் இசையில் அவர் பாடி நடித்த ஆல்பம் தான் இனிமேல். இதில் ஸ்ருதிஹாசன் உடன் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். பாடல் வரிகளை கமல் எழுத நேற்றிலிருந்து இந்த பாடல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது.
அது மட்டுமல்லாமல் இந்த ஆல்பம் சாங் பிரமோஷனுக்காக ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் அவ்வப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்கள். பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உரையாடிய அவர்களிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஸ்ருதிஹாசனிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என நிருபர் ஒருவர் கேட்க இது என்னுடைய மியூசிக் சம்பந்தப்பட்ட ப்ரொமோஷன். அதை பற்றி மட்டுமே கேளுங்கள் என கறாராக சொல்லிவிட்டார்.
இதையும் படிங்க: கமல் அண்ணன் பொண்ணிடம் ஜொல்லு விட்ட ரஜினிகாந்த்… நாங்க சொல்லலை… அந்த நடிகையே சொல்லிட்டாங்கப்பா!
அதேபோல் லோகேஷ் கனகராஜிடம் இனிமேல் நீங்கள் படத்தில் நடிப்பதில் முனைப்பு காட்டுவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் எனக்கு மிகவும் பிடித்த படம் பொல்லாதவன். அந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு ஆசை.
அதை நானே இயக்கினாலும் சரி. அல்லது என்னுடைய அசோசியேடிவ் இயக்கினாலும் சரி. அந்த மாதிரி படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை. ஆனால் இந்த ஆல்பம் சாங் நடிப்பதற்கு முக்கிய காரணம் கமல் மட்டுமே என லோகேஷ் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: குடும்பமே பட்டினி!.. தயங்கி தயங்கி உதவி கேட்கப்போன நாடக நடிகர்… எம்.ஜி.ஆர் செய்ததுதான் ஹைலைட்!…
ஏனெனில் லியோ படத்தில் கடைசி காட்சியில் ஒரு வசனம் பேச வேண்டும் என கமலிடம் சொன்னபோது நேரம் மிகவும் எடுத்துக் கொள்ளாமல் ஐந்து மொழிகளிலும் பேசி கொடுத்துவிட்டு சென்றார். அந்த ஒரு காரணத்திற்காக இந்த ஆல்பம் சாங் நான் நடித்துக் கொடுத்தேன். அதோடு மூன்று படத்தை இயக்கும் சூழ்நிலையில் இப்போது நான் இருக்கிறேன். அதற்கான அட்வான்ஸ்சையும் வாங்கி இருக்கிறேன். அதை எல்லாம் முதலில் முடிக்க வேண்டும். அதன் பிறகு தான் நடிப்பு என லோகேஷ் கனகராஜ் பதிலளித்திருக்கிறார்.
