ஹப்பாடி ஒருவழியா மொத்த பிரச்னையும் முடிச்சி விட்டாங்கையா… செழியனும், ஜெனி சேர்ந்தாச்சு…

Published on: March 28, 2024
---Advertisement---

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனி இருக்கும் ரூமுக்குள் செழியனை தள்ளி கதவை சாத்துக்கின்றனர். அதை பார்த்து ஜெனி ஷாக் ஆகிறார். நீ தான் கதவை பூட்டிட்டு வந்தியா என்கிறார். கதவை பூட்டிட்டு எப்படி உள்ளே வர முடியும் என செழியன் கேட்க நீ செய்வ என்கிறார் ஜெனி.

ஜெனி கதவை திறக்க சொல்லி கதவை தட்டுகிறார். மரியம், எழில் மற்றும் பாக்கியா வெளியில் தவித்து நிற்கின்றனர். செழியனுக்கு எனக்கு உன்கிட்ட பேசணும். இப்போதான் அதுக்கு டைம் கிடைச்சிது என்கிறார். ஜெனி நான் ஏன் உன்கிட்ட பேசணும். உனக்கு, என்னை எட்டாவது படிக்கிறப்ப இருந்தே தெரியும்.

இதையும் படிங்க: பிசியா நடிச்சிக்கிட்டு இருந்த பரத்!.. இவரு நிலமை இப்படி ஆகிப்போச்சே!…

ஆனால் இப்போ வந்தவ உனக்கு முக்கியமா போயிட்டாளா? உனக்காக நான் எவ்வளோ போராடி சாகுற வரைக்கும் போனேன் என்கிறார். செழியன் நீ எனக்காக இருக்கலை. என்கிட்ட பேசுறது இல்லை என செழியன் கூற நான் உன் குடும்பத்து ஆளுங்க கிட்டத்தானே பேசுனேன்.

என் டேடி, மம்மி வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வர வரைக்கும் நான் தனியா தான் இருப்பேன். பேச்சுத்துணைக்கு கூட ஆள் இருக்க மாட்டங்க என்கிறார். செழியன் ஜெனியிடம் நீ இல்லன்னா நான் செத்துப் போயிடுவேன் என்கிறார். ஜெனி உன் கூட இருந்தா நான் செத்துப் போயிடுவேன். கடுப்பில் ஜெனி திரும்பவும் கதவை தட்ட மரியம் திறக்க போகிறார்.

இதையும் படிங்க: என்னங்க ஒரு முடிவுக்கு வாங்க? முத்து மாட்டுவாரா இல்ல தப்பிச்சிடுவாரா? ஆர்வத்தில் ரசிகர்கள்!…

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.