Connect with us

Cinema News

தமிழ் புத்தாண்டுக்கு செம ட்ரீட் கொடுக்க ரெடியான தளபதி!.. தயாரிப்பாளரே ஓப்பனா அதை சொல்லிட்டாங்களே!..

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படம் தான் தற்போது தமிழ் சினிமாவின் டாக் ஆப் தி டவுன் ஆக மாறியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் விஜயுடன் இணைந்து ஏகப்பட்ட பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

கடந்தாண்டு வெளியான லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் இணைந்து நடித்த நிலையில், அதைவிட அதிகமாக கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்திரி, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: செந்தூரப்பாண்டி படப்பிடிப்பில் கேப்டன் செய்த செயல்!.. நெகிழ்ந்து போன விஜய்!.. என்ன மனுஷன்யா?!..

நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு கெட்டப்புகளில் கோர்ட் படத்தில் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகிறதா? அல்லது ஹெயிஸ்ட் படமா? என்கிற குழப்பத்துடன் அந்த படம் உருவாக்கி வருகிறது. விஜய்க்கு வில்லன் விஜய் தான் என்றும் கூறுகின்றனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு சமிபத்தில் கோட் படத்தின் மிகப்பெரிய அப்டேட் விரைவில் வரும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது, விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஃபர்ஸ்ட் சிக்கிள் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ஆடு ஜீவிதம் படத்தின் ரியல் கலெக்‌ஷன் இதுதான்!.. பிரித்விராஜ் வெளியிட்ட பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என கூறப்படுகிறது.

கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானால், அரபிக் குத்து, நா ரெடிதான் பாடல் போல அடுத்த யூடியூப் சாதனையையும் பல பிரபலங்கள் ரீல்ஸ் போடும் விதமாகவும் வெளியாகும் என தெரிகிறது. விஜய்யுடன் திரிஷா நடனம் ஆடிய குத்துப் பாடல் வருமா? அல்லது விஜய் பாடியுள்ள  பாடல் வெளியாகுமா? என்பது விரைவில் தெரியும்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top