Cinema News
டேனியல் பாலாஜியின் மரணம்.. கோயிலில் நடந்த அதிசயம்! கதிகலங்கி நிற்கும் ஆவடி மக்கள்
Actor Daniel Balaji: நேற்று முன்தினம் பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிக இள வயதில் அவரின் மரணம் என்பது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள டேனியல் பாலாஜி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர்.
ரகுவரன், பிரகாஷ்ராஜ் வரிசையில் இவரும் தனது தனித்துவமான நடிப்பால் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை பெற்றார். இந்த நிலையில் டேனியல் பாலாஜியை பற்றி ஆவடி மக்கள் பல விஷயங்களை பகிர்ந்தனர். ஆவடியில் டேனியல் பாலாஜி சொந்தமாக ஒரு கோயிலை கட்டியிருக்கிறார். அங்காள பரமேஸ்வரி கோயிலை சுமார் 2 கோடி மதிப்பில் கட்டியிருக்கிறாராம்.
இதையும் படிங்க: இதுதான் என் ட்ரீம் புராஜெக்ட்!.. கடைசி வரை சூர்யாவை விடுறதா இல்லை போல கெளதம் மேனன்!..
7 வயதில் இருந்தே அந்த கோயிலுக்கு செல்வாராம் டேனியல் பாலாஜி. அந்த நேரத்தில் கோயில் மிகவும் பாதாளத்தில் இருந்ததாம். அம்மனுக்கு பூஜை செய்ய அருகில் இருக்கும் கிணற்றில் இருந்து 7 வயது சிறுவனாக இருக்கும் போதே டேனியல் பாலாஜிதான் தண்ணீர் இறைத்து வந்து கொடுப்பாராம். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட அந்த கோயிலில் அம்மனுக்கு திருமண வைபோகம் நடைபெற்றதாம்.
அதற்கு வந்திருந்த டேனியல் பாலாஜி அந்த ஏரியா மக்களிடம் சகஜமாக பேசி அன்னதானம் பரிமாறி மகிழ்ச்சியுடன் இருந்தாராம். தன் அம்மா பிறந்த நாள் என்றால் ஆவடி மக்களுக்கு சேலைகள் எடுத்துக் கொடுப்பாராம். படத்தில்தான் வில்லன். நிஜத்தில் ஹீரோ என அந்த ஏரியா மக்கள் கூறினார்கள்.
இதையும் படிங்க: தனுஷால கார்த்தி பட வாய்ப்பை இழந்த இயக்குனர்! விஷயம் தெரிஞ்சு கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?
ஒவ்வொரு நாளும் அந்த கோயிலில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கமாம். டேனியல் பாலாஜி இறந்த அன்று கூட விளக்கேற்றியிருக்கிறார்கள். ஆனால் அதிகாலையிலேயே அந்த விளக்கு அணைந்து விட்டதாக அவ்வூர் மக்கள் கூறினார்கள். இது ஏதோ முன் அறிகுறியாகத்தான் இருந்திருக்கிறது என கூறி கண்ணீர் மல்க அந்த மக்கள் கூறினார்கள்.