Connect with us
dhanush

Cinema News

தனுஷால கார்த்தி பட வாய்ப்பை இழந்த இயக்குனர்! விஷயம் தெரிஞ்சு கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

Actor Dhanush: இன்று கோலிவுட்டே அதிசயிக்கும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த இளம் வயதில் சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் திகைத்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் விதவிதமான கெட்டப்களில் நடித்து வரும் தனுஷ் இப்போது அவருடைய 50வது படத்தை இயக்கி அவரே அதில் நடிக்கவும் செய்கிறார்.

அடுத்ததாக இளையராஜா பயோபிக்கில் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார் தனுஷ். இப்படி பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளில் நடிக்கும் தனுஷ் உலகளவில் பேசப்படும் நடிகராகவும் மாறியிருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி , ஹாலிவுட் என கலக்கி வருகிறார்.

இதையும் படிங்க: அய்யயோ அதெல்லாம் வேணாம்… அதிர்ச்சியான விஜய்… ஆச்சரியப்பட்ட கௌதம் மேனன்… இப்படிப்பட்டவரா டேனியல் பாலாஜி?!

ஆரம்பத்தில் கலக்கலான காமெடி படங்களில் நடித்து ஓரளவு ரசிகர்களை கவர்ந்த தனுஷ் சமீபகாலமாக சமூகத்திற்கு தேவையான சமூகம் சார்ந்த பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அசுரன் திரைப்படம் தனுஷை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதற்கு அடுத்ததாக கர்ணன் திரைப்படமும் அவர் கெரியரில் மிகவும் பேசப்பட்ட படமாக மாறியது.

கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பதிவுசெய்யவில்லை என்றாலும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இயக்குனர் சுராஜ் தனுஷை பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். படிக்காதவன் படத்தை இயக்கிக் கொண்டிருந்த சுராஜிற்கு திடீரென கார்த்தியின் சிறுத்தை படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததாம். அதன் தெலுங்கு படத்தை சுராஜும் கார்த்தியும்தான் ஒன்றாக பார்த்தார்களாம்.

இதையும் படிங்க: என் படத்தில் விஜய் நடிக்க மறுத்தும் அவர் கூட நடிக்க காரணம்! கௌதம் மேனன் கூறிய சூப்பர் தகவல்

அதனால் தமிழில் இந்தப் படத்தை எடுத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறார் சுராஜ். அதற்குள் படிக்காதவன் படம் முடிவடைய அதற்கு அடுத்தே மீண்டும் தனுஷுடன் இணைந்து மற்றொரு படத்தை இயக்கும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் சுராஜ். அதுதான் மாப்பிள்ளை திரைப்படம். இந்த தகவலை சுராஜ் கார்த்தியிடம் சொல்ல ஆனால் கார்த்தியோ ‘ஒன்றும் பிரச்சினை இல்லை. நாம் வேறொரு படத்தில் பணியாற்றலாம்’ என சொல்லி அனுப்பியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top